பின்லாந்து நாடு கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் பேசப்படும் நாடு. இங்குள்ள கல்வி திட்டங்கள் பல நாடுகளுக்கு முன் மாதிரியாக இருக்கிறது.
பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் பிரதமராக, சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். உலகிலேயே மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு வந்த பெருமை இவருக்கு உண்டு.
2019ஆம் ஆண்டு பின்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதிவியேற்றதிலிருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறார்.
அப்படித்தான் இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சன்னா மரீன் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஊடகங்களும், எதிர்கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றன.
ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பொறுப்புணர்வின்றி மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடலாமா என்று ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியினரே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடவில்லை என்பதை சன்னா மரீன் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து உறுதிபடுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் சன்னா மரீன் அளித்துள்ள விளக்கத்தில், “இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
நான் போதை பொருட்களை எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கான நேரத்தை எனது நண்பர்களுடன் செலவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோன காலகட்டத்தில் சன்னா மரீன் நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ அப்போது வைரலானது.
எதிர்கட்சிகளின் கண்டனத்திற்கு பிறகு இது போன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விண்வெளியா? அடுப்பங்கரை கல்லா? நாசாவை கலாய்த்த எலான் மஸ்க்!