தனக்கு பைக் கற்றுக்கொடுக்க ஆள் தேடி வருவதாகக் கூறி , இளைஞர் ஒருவர்
நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேலை தேடுபவர்களானாலும், வேலைக்கு ஆள் தேடுபவர்களானாலும், இணையம் அவர்களுக்கான ஒரு சிறந்த மீடியம். கேக்கில் ரெஸ்யூம் அச்சடித்து கொடுத்த பெண், சோமேட்டோ ஊழியர் போல வேடமணிந்து வேலை தேடியவர் என சுவாரஸ்ய கதைகளை கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி, இங்கு ஒருவர் வெளியிட்டுள்ள விளம்பரம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ப்ரவீன்பாய் சுதானி என்பவர் செய்தி தாளில் விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தார்.
அதில் அவர், தனக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுக்க ஆள் தேடி வருவதாக தெரிவித்திருந்தார்.
“பைக் ஓட்ட சொல்லிக்கொடுக்க ஆள் வேண்டும். ஆனால் அவர் என்னிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது.
திட்டுவாங்குவது என்றால் என் அப்பாவிடமே கற்றுக்கொண்டிருப்பேன். மேலும் அவர் Anime பார்ப்பவராக இருந்தால், நானும் அவரும் Naruto குறித்து விவாதித்துக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.
இந்த நியூஸ் பேப்பர் விளம்பரத்தின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து 6000 லைக்குகளும், 4 லட்சம் வியூக்களையும் பெற்றுள்ளது.
ஒருவர் ” பிசிசிஐயில் கூட இதை விட எளிதாக வேலை கிடைத்துவிடும்” எனக் கூறி கிண்டல் செய்து இருக்கிறார். இணையவாசிகள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!