சென்னையில் வைக்கப்பட்டுள்ள ஆபாசமான விளம்பரம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இயங்கி வரும் ஹோட்டலுக்கு வெளியே டிஜிட்டல் விளம்பர பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
சிகப்பு நிறத்தில் எல்.இ.டி. விளக்குகளால் எரியும் அந்த விளம்பரத்தில், “கெட் இன் அண்ட் ஃபக் எனி கேர்ள்ஸ், கட்டணம் ரூ.1000” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 1000 ரூபாய்க்கு எந்த பெண்ணுடன் வேண்டுமானாலும் உல்லாசமாக இருக்கலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
உல்லாசத்துக்கு அழைக்கும் வகையில் பொதுவெளியில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் வழியில் இதுபோன்ற விளம்பரம் வைக்கப்பட்டிருப்பது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விளம்பரத்தை பார்த்த கவிதா கஜேந்திரன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார் , இது எப்படி சென்னையில் நடக்கிறது என்று கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக உடனடியாக சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு சென்னை போலீசாரும் ட்விட்டரில் பதிலளித்துள்ளனர். “கவனத்தில் கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.
பிரியா
ஆம்னி பேருந்து கட்டணம்: அரசே நிர்ணயிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
அதிமுகவில் இடமில்லை: 3 பேருக்கு மெசேஜ் சொன்ன ஜெயக்குமார்