வைரலாகும் ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர்!

டிரெண்டிங்

“கல்கியின்  பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின்செல்வன்”.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி,கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம்பிரபு, நாசர், பிரபு உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன் -1′ திரைப்படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.

இந்த நிலையில், “பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்” என்று மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்திற்குள்ளாகியுள்ளது.

ஏற்கனவே கருத்தியல் ரீதியாக பொன்னியின் செல்வன் நாவலை கடுமையாக விமர்சனம் செய்தவர் ஜெயமோகன், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரங்களுக்கு எதிராக படங்களை இயக்குபவர் மணிரத்னம்,

இவர்கள் இருவரும் எப்படி சோழர் கால ஆட்சியையும், அப்போதைய தமிழர்களின் வாழ்வியலை நேர்மையாக பதிவு செய்வார்கள் என்கிற விமர்சனம் படம் அறிவிக்கப்பட்டபோது எழுந்தது.

படம் வெளியான பின்பு அதுபற்றிய விவாதங்கள், விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிய தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் அரசியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் தங்களது செயல்பாடுகளால் தமிழக மக்களின் கவனத்தை கவரும் பாசக்கார மதுரைகாரர்கள், சேட்டை தனமாக வெளியிட்டுள்ள போஸ்டர் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

“பாண்டியர்களுக்கும் சோழர்களுக்குமான பகைதான் பொன்னியின் செல்வன் நாவலின் அடிநாதம்”

சோழர்களின் ஆட்சி நிர்வாகம், கடல் கடந்து வெற்றிகளை குவித்தது என சோழ மன்னர்களின் வீரதீர பராக்கிரமங்களை பேசும் வகையில் எழுதப்பட்டது தான் பொன்னியின் செல்வன் நாவல்  இதைப் பற்றி நேரடியாக குறிப்பிடாமல்

“சோழர்களே! பாண்டிய நாட்டுக்கு வந்தோமா, மீனாட்சிய கும்பிட்டோமா, தியேட்டர்ல படத்தை ஓட்டுனோமா, புரோட்டாவை திண்டோமானு போயிட்டே இருக்கணும்… அத விட்டுபுட்டு மறுபடியும் ஏதாவது எசக்கு பிசக்கா பண்ணனும்னு நினைச்சா அப்புறம் அவ்வளவுதான்…” 

என்று நகைச்சுவை கலந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நடிகர்களின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இராமானுஜம்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
6
+1
0
+1
2
+1
0
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published.