பொன்னியின் செல்வனும் பொருளாதாரமும்: அப்டேட் குமாரு
‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று படம் கற்பனை படம்னு நிறைய பேரு சொல்றாங்க. ஆனா, ‘இதுல பொருளாதாரமும் இருக்கு’னு சொன்னாங்க பக்கத்து வீட்டு பிரைவேட் ஸ்கூல் டீச்சர்.
‘எப்படி டீச்சர்’னு கேட்டேன்… ’மாசக் கடைசியில ரிலீஸ் பண்ணாலும் இவ்ளோ புக்கிங் ஆயிருக்குதே. அப்படின்னா, தமிழ்நாட்ல சம்பளம் வாங்காமலேயே காசு நிறைய வச்சிருக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்கனுதானே அர்த்தம்.
தமிழ்நாட்டோட பொருளாதாரம் வளர்ந்திருக்கு பாத்தியா?’னு கேட்டாங்க.
’ஆதித்த கரிகாலனை கொன்னது யாருனு கண்டுபிடிச்சிடலாம், ஆனா மாசக் கடைசியில பணத்தைக் கண்டுபிடிக்க முடியலை டீச்சர்’னு சொல்லிட்டு, நான் மீம்ஸ் பாக்க ஆரம்பிச்சிட்டேன். நீங்களும் அப்டேட்ஸ் பாருங்க..
சரவணன். ????
ஒரு கிலோ சிக்கன் 140 ரூபாய், ஒரு கிலோ கத்திரிக்காய் 120 ரூபாய்..
அடேய் புரட்டாசி மாதம் நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டே..
மயக்குநன்
‘சோழநாடு’ வரலாற்றுப் படம் சூப்பர்… ‘கோடநாடு’ த்ரில்லர் படம் எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க பாஸ்..?!
கடைநிலை ஊழியன்
தனுஷ் நவ்-
ஒரு நாள் முன்னாடியே ரிலீஸ் பண்ணிருக்கேன்.. ஒருத்தனாவது என்னோட படத்த பத்தி பேசுறானுங்களா னு பாரு..
Mannar & company
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க..
பின்ன என்னப்பா..
’பொன்னியின் செல்வன்’ படத்தில் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடுன்னு எல்லா நாட்டை பத்தியும் சொன்னாங்க, கொடநாட்டை பத்தி எதுவுமே இல்லையேன்னு கேட்குறாம்பா.
சரவணன். ????
“குஜராத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படவில்லை!” – பிரதமர் மோடி
குஜராத்தில் 25 ஆண்டுகளா ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தான் இதற்கு காரணம்னு சேர்த்து சொல்லிடுங்க..
balebalu
இந்தியாவை ஒருங்கிணைப்பது தேசிய விளையாட்டுகள் தான்: பிரதமர்
நல்ல வேளை ‘ஒரே நாடு ஒரே விளையாட்டு’ ன்னு எதுவும் சொல்லல்ல
கடைநிலை ஊழியன்
டிக்கெட் போட்டாச்சு மாமா..
சூப்பர் மாப்ள.. ’பொன்னியின் செல்வன்’னா.. எத்தன மணி ஷோ..
’பொன்னியின் செல்வன்’னா.. ஆயுத பூஜைக்கு ஊருக்கு போக டிக்கெட் போட்டாச்சு மாமா.
மயக்குநன்
ஒவ்வொரு தேர்தலின்போதும் பழைய நாடகத்தை அரங்கேற்றுகிறார் கெஜ்ரிவால்!- பாஜக.
உங்கள மாதிரி புதுசு புதுசா படம் காட்டுற திறமை அவருக்கு இல்லை போல..?!
வசந்த்
நான் விளையாட்டுத்தனமாக பேசியதை பெரிதாக்குகிறார்கள் -அமைச்சர் பொன்முடி
ஓ…இதத்தான் விளையாட்டு வினையானது என்பார்களோ…?
கோழியின் கிறுக்கல்
சில சமயங்களில் பேசாமல் இருப்பதால் வரும் பிரச்சனையை விட,
பேசுவதால் வரும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்!
லாக் ஆஃப்
அடுத்த பிரதமரை முடிவு செய்யும் அணில் நாங்கள்: டிடிவி.தினகரன்
உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கொடுத்த உத்தரவாதம்: மனோஜ் பாண்டியன்