இந்த பொங்கல் திருநாளில் வழக்கமான பொங்கல் செய்து கொண்டாடுவது ஒருபக்கம் இருந்தாலும், சேமியாவில் சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வழங்கி உங்கள் பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.
என்ன தேவை?
சேமியா – 1 கப்
பாசிப்பருப்பு – அரை கப்
வெல்லம் – ஒன்றரை கப்
நெய் – அரை கப்
முந்திரிப்பருப்பு – 20
திராட்சை – 20
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வெல்லத்தை பொடித்து கொள்ளவும். ஒரு கடாயில்மொரு ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவைச் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். ஒரு கடாயில் பாதியளவு நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்த பின்னர் அதில் இரண்டு கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிடுங்கள். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி அதை வெந்த சேமியாவில் சேருங்கள். அத்துடன் வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து வரும் நன்கு கைவிடாமல் கிளறுங்கள். கடைசியில் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை, மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். தித்திப்பான சேமியா சர்க்கரை பொங்கல் ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிக்பாஸ் சீசன் 7: வரலாற்றை மாற்றியெழுதி… டைட்டில் வின்னராக மகுடம் சூடிய அர்ச்சனா