சுவையான சிற்றுண்டி கலவையான இந்த சிவ்டா, மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்கும். அனைவருக்கும் ஏற்ற இந்த சிவ்டா குளிர்காலத்துக்கேற்ற சிறந்த நொறுக்குத்தீனியாகும் அமையும்.
என்ன தேவை?
பொரி – ஒரு பாக்கெட்
அவல் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – 50 கிராம்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
பல்லாக நறுக்கிய தேங்காய் – அரை கப்
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள்தூள் – சிறிது
எலுமிச்சை – அரை மூடி (சாறு பிழியவும்)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை (பொரியில் உப்பு இருப்பதால் பார்த்து போட்டுக்கொள்ளவும்).
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, தேங்காய்ப்பல், அவலை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும். பின்னர் பெருங்காயத்தூள், பொரி, வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்துக் கலந்து, மஞ்சள்தூள், மிளகாய்தூள் தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். கலவையை பெரிய பாத்திரத்துக்கு மாற்றி ஒரு குலுக்கு குலுக்கி எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து விரும்பும்போது சாப்பிடலாம். ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…