குறைந்த விலையில் ஸ்மார்ட் என்றாலே எல்லார் நினைவிலும் வருவது POCO தான். இந்த முறையும் பக்காவான பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் POCO தனது அடுத்த மாடலான POCO M6 PRO 5G ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.
POCO M6 PRO 5Gஸ்மார்ட் போனை 4GB ரேம் 128 GB ஸ்டோரேஜ் என்ற புதிய வேரியன்டில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
POCO M6 PRO 5Gஸ்மார்ட் போன் ஆனது மூன்று வேரியன்களில் கிடைக்கிறது.
4GB ரேம் 64GB ஸ்டோரேஜ், 4GB ரேம் 128 GB ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் 128GB ஸ்டோரேஜ்.
4GB ரேம் 64GB ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் 128GB ஸ்டோரேஜ் ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது, 4GB ரேம் 128 GB ஸ்டோரேஜை சேர்த்துள்ளது.
ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
குறிப்பிட்ட டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி உண்டு.
நல்ல தரமான பேட்டரி மற்றும் கண்ணை கவரும் Flagship டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14 முதல் விற்பனையில் உள்ள இந்த POCO M6 PRO 5G ஸ்மார்ட் போன் MIUI மற்றும் ஆன்ராய்டு 13-ல் இயங்குகிறது.
POCO M6 PRO 5G ஸ்மார்ட் போன் வேரியன்ட்களின் விலை விபரங்களை பார்க்கலாம்:
4GB ரேம் 64GB ஸ்டோரேஜ் – ரூ.10,999
6GB ரேம் 128GB ஸ்டோரேஜ் – ரூ.12,999
4GB ரேம் 128 GB ஸ்டோரேஜ் – ரூ.11,999
POCO M6 PRO 5G ஸ்மார்ட் போன் பற்றிய மேலும் பல தகவல்களை பார்க்கலாம்
• ஃபாரஸ்டு க்ரீன் மற்றும் பவர் ப்ளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது
• ஸ்னாப் டிராகன் 4 ஜென் 2 ப்ராசசர் கொண்டது
• ரியர் கேமரா 50MP + 2MP
• ப்ரண்ட் கேமரா 8MP
• 6.79 இன்ச் full HD+ டிஸ்ப்ளே, 90Hz
• 5000mAh பேட்டரி
• எடை 199g
• 1 வருட மேனுபேக்சர் வாரண்டி, 6 மாதம் பாக்ஸ் ஆக்சசரிஸ் வாரண்டி
• 18w ஃபாஸ்டு சார்ஜிங்
• ஐப்ரிட் சிம் ஸ்லாட்
• கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடக்க்ஷன்
அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் பயனடையும் வகையில் இந்த ஸ்மார்ட் போன் ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது.
-பவித்ரா பலராமன்
செங்கல்பட்டு என்கவுண்டர்: சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
டிஜிட்டல் திண்ணை: நட்டா, சந்தோஷ் சொன்னது என்ன? அண்ணாமலையின் 24 மணி நேர சைலன்ட் பின்னணி!
மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்: ரிலீஸ் எப்போது?
அண்ணாமலை வாயில கொழுக்கட்டையா? – அப்டேட் குமாரு