Poco F6: மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு, ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான போகோ, இந்தியாவில் தனது புதிய ‘போகோ F6’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 50MP கேமரா, 5,000mAh பேட்டரி, 90W டர்போசார்ஜிங் வசதி என பல அட்டகாசமான அம்சங்களை கொண்டு களமிறங்கியுள்ளது.
‘போகோ F6’: விலை என்ன?
இந்த ஸ்மார்ட்போன் 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 8GB RAM + 256GB சேமிப்பு கொண்ட வகை ரூ.29,999 என்ற விலையிலும்,
12GB RAM + 256GB சேமிப்பு கொண்ட வகை ரூ.31,999 என்ற விலையிலும்,
12GB RAM + 512GB சேமிப்பு கொண்ட வகை ரூ.33,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் கிளாசிக் பிளாக், டைடானியம் க்ளோ என 2 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த ‘போகோ F6’ ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் மே 29 மதியம் 12 மணிக்கு துவங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு, ரூ.2,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘போகோ F6’: சிறப்பம்சங்கள் என்ன?
இரண்டு 5ஜி சிம்களை பயன்படுத்திக்கொள்ளும் வசதி கொண்ட இந்த ‘போகோ F6’ ஸ்மார்ட்போன், 2712 x 1220 பிக்சல்களுடன் கூடிய 6.67-இன்ச் 1.5K AMOLED திரையை கொண்டுள்ளது.
120Hz திரை புதுப்பிப்பு விகிதம், 2400 நிட்ஸ் ஒளிரும் திறன், 480Hz டச் சாம்ப்ளிங் ரேட், 2160Hz உடனடி டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன், HDR 10+ தரம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஜியோமி ஹைப்பர் மென்பொருள் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, போகோ F6 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் சோனி IMX882 சென்சார் பொருத்தப்பட்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது.
அதேபோல 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 4K தர வீடியோ, ஸ்லோ-மோஷன், டைம் லேப்ஸ் உள்ளிட்ட வசதிகளையும் இந்த கேமரா கொண்டுள்ளது.
முன்புறத்தில், செல்ஃபிக்களுக்காக 20 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், 90W டர்போசார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh அளவிலான பேட்டரியையும் இந்த போகோ F6 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, ப்ளூடூத் 5.4, வை-பை, USB டைப்-சி வசதி, டால்பி அட்மாஸ் தரம் கொண்ட டூயல் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் : பழிவாங்கும் நடவடிக்கையா?
கோல்டன் விசா… ரஜினியை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம் – இதுவரை பெற்றவர்கள் யார் யார்?
ஹெல்த் டிப்ஸ்: உங்கள் கதவுகள் சிறிது நேரமாவது திறந்திருக்கட்டும்!
வேலைவாய்ப்பு : போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணி!