இயற்கை உருவாக்குவதும் மனிதன் உருவாக்குவதும்தான் உணவே தவிர, இயந்திரங்கள் உருவாக்குவது உணவல்ல.
இந்த நிலையில் பதப்படுத்தப்படும் உணவுகளின் பாக்கெட் உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடுபவரின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. அவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் இந்த விஷயங்களில் கவனம் தேவை.
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள், பேக்கரிகளில் விற்கப்படும் இனிப்பு வகைகளை ஓரிரு நாட்கள் மட்டும் எடுத்துக் கொள்வதால் பாதிப்புகள் எதுவும் வருவதில்லை.
சுவைக்கு அடிமையாகி, தினந்தோறும் எடுத்துக்கொண்டே இருந்தால் பாதிப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதிகமான ஆல்கஹால் எடுப்பதை தவறு என்கிறோம். அதுபோல்தான் அளவுக்கதிகமான பாக்கெட் உணவுகளை எடுத்துக்கொள்வதும் தவறு.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், அப்பளம் போன்றவற்றில் அதிக அளவு சோடியம் (உப்பு) சேர்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், ரோடமைன் பி மற்றும் பிற ரசாயனங்கள், நிறமிகள் மற்றும் சுவையூட்டிகள் கலந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்வதால், ஹார்மோன் சமநிலையின்மை, மனச்சோர்வு, பதற்றம், எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள், சோர்வு, தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மறைமுகமாக அவை புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன.
இந்த நிலையில் பாக்கெட் உணவுகளை வாங்கும்போது பாக்கெட்டின் பின்புறத்தில் உள்ள லேபிளில் என்னென்ன சேர்மானங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கட்டாயம் பார்க்க வேண்டும்.
அதில் அதிக அளவில் உப்பும், நிறமிகளும் சேர்க்கப் பட்டிருந்தால் தவிர்ப்பதே நல்லது. குழந்தைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
நமது நோய் எதிர்ப்பு அமைப்பு நன்றாக வேலை செய்வதற்கும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம்தான் அடிப்படை.
வெளி இடங்களுக்குச் செல்லும்போது பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட பானங்களுக்கு மாற்றாக இளநீர், நுங்கு, பழ ஜூஸ் வகைகள் போன்றவற்றையும் பாக்கெட் உணவுகளுக்கு பதிலாக உலர் பழங்கள், நட்ஸ் போன்ற இயற்கையான உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டஃப் பைட் கொடுத்த அதிமுக, அமமுக: அசராத திமுக
கிச்சன் கீர்த்தனா : மாவற்றல் – பருப்பு அரைத்த குழம்பு
கோவை : கணபதி ராஜ்குமார் வெற்றி … அண்ணாமலைக்கு பின்னடைவு!
நான்கு தொகுதிகளிலும் வெற்றி… ஸ்வீப் செய்த இடதுசாரிகள்!