பி.எம்.கிசான் வலைத்தளத்தில் ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’’ திட்டமானது ஒன்றிய அரசின் 100 சதவீத பங்களிப்புடன் பிப்ரவரி 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது ஒன்றிய அரசு 12-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் அனைவரும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஒ.டி.பி. பெற்று அதைப் பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தும் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.
அதற்கான வழிமுறைகள் இதோ:
- www.pmkisan.gov.in வலைதள பக்கத்திற்கு செல்லவும்.
- பார்மர் கார்னர் பக்கத்தில் ‘eKYC’ என்பதை கிளிக் செய்யவும்.
- புதிதாக தோன்றும் திரையில் ஆதார் எண்ணை பதிவிடவும்.
- ‘தேடல்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
- உங்கள் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிடவும்.
- உள்ளிட்ட விவரங்களை வெற்றிகரமாக சரிபார்த்தவுடன் eKYC முடிக்கப்படும்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பி.எம்.கிசான் உதவி எண்ணிற்கு 011-24300606,155261 அழைக்கவும்.
க.சீனிவாசன்
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!