கூகுள் பிக்சல் 7 சீரிஸ்: விலை இவ்வளவுதானா?

டிரெண்டிங்

ஆப்பிள் ஐபோன்கள் போன்று தனித்துவமான அம்சங்களுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றுதான் கூகுள் பிக்சல். இந்த போன்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.

கூகுள் நிறுவனம் ’அக்டோபர் ஈவென்ட் 2022 ’ நிகழ்ச்சியில் கூகுள் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதே போல் கூகுள் பிக்சல் 7 ப்ரோவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிக்சல் 7 அம்சங்கள்:

பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.

மேலும் கூகுளின் சொந்த புதிய டென்சர் ஜி2 செயலி மூலம் இயக்கப்படுகிறது. பிக்சல் 7 மாடல் 8ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கூகுளின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 சாப்ட்வேர் மூலம் இயங்குகிறது. கூடுதலாக, இந்த மாடல்கள் 5 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்குகின்றன.

pixel 7 series launched starting rs 59 999 top specs features india

பிக்சல் 7 டூயல் ரியர் கேமராக்களுடன் ஒரு பிரைமரி 50 மெகாபிக்சல் கேமரா + அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் வருகிறது.

வீடியோ கால் மற்றும் செல்பி பயன்பாட்டிற்கு முன்புறத்தில் 10.8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பிக்சல் 7 ப்ரோ அம்சங்கள்:

பிக்சல் 7 ப்ரோ ஆனது QHD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz திரை புதுப்பிப்பு வீதத்தை வழங்கும் பெரிய 6.7-இன்ச் LTPO டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இந்த மாடலும் கூகுளின் சொந்த புதிய டென்சர் ஜி2 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

pixel 7 series launched starting rs 59 999 top specs features india

பிக்சல் 7 ப்ரோ மாடல் 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

இதுவும் கூகுளின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 சாப்ட்வேர் மூலம் இயங்குகிறது மற்றும் 5 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்குகின்றன.

பிக்சல் 7 ப்ரோ 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் பேக் பேனலில் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

pixel 7 series launched starting rs 59 999 top specs features india

ப்ரோ மாடல் 30x சூப்பர் ரெசல்யூஷன் ஜூம் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸுடன் வருகிறது.

பிக்சல் 7 ப்ரோ புதிய ‘மேக்ரோ ஃபோகஸ்’ அம்சத்தையும் கொண்டுள்ளது. வீடியோ கால் மற்றும் செல்பீ பயன்பாட்டிற்கு முன்புறத்தில் 10.8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

கூகுள் பிக்சல் 7 சீரிஸ் ரூ. 59,999க்கு விற்பனையாகிறது. ஆனால் பிக்சல் 7 ப்ரோ சற்று அதிகமாக ரூ. 84,999க்கு கிடைக்கிறது.

மேலும் அறிமுக சலுகையாக பிக்சல் 7 வாங்கும்போது ரூ. 6000க்கு கேஷ்பேக்கும், அதேபோல் பிக்சல் 7 ப்ரோ வாங்கும்போது ரூ. 8500க்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ரயிலில் குடுமிபிடி சண்டை: தடுத்த போலீஸுக்கும் காயம்!

இந்த கேரக்டரிலா சுஷ்மிதா சென்?

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *