Pill-free remedies for cold minnambalam health tips in Tamil

ஹெல்த் டிப்ஸ்: தலை பாரத்துக்கும் ஜலதோஷத்துக்கும் மாத்திரைகள் இல்லாத தீர்வுகள் இதோ…

டிரெண்டிங்

லேசான தூறல், மிதமான குளிர் என எதுவுமே சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. உடனே தலை பாரமாவது, சளி பிடித்துக்கொள்வது போன்ற பிரச்சினைகள் வரும். இந்த நிலையில் தலை பாரத்துக்கும் ஜலதோஷத்துக்கும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டு நிவாரணம் பெறுவார்கள்.

அப்படி மாத்திரைகள் இல்லாத தீர்வுகள் இதோ…

மழை, குளிர்கால பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க, நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

துளசியும் ஏலக்காயும் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது, கற்பூரவள்ளி இலை அல்லது வெற்றிலை அல்லது ஆடாதொடா இலைகள் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்தலாம்.

சித்தரத்தையும் அதிமதுரமும் தொண்டைவலிக்கும், தொண்டைக் கரகரப்புக்கும் அற்புதமான மருந்துகள். இவற்றையும் தட்டிப்போட்டு தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

10 வேப்பிலைகள், அரை டீஸ்பூன் சீரகம், அதிகபட்சம் 5 மிளகு, அரை டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை 250 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைக்கவும். இதில் பெரியவர்கள் என்றால் 30-50 மில்லி, 12 வயதுக்குட்பட்டவர்கள் 20 மில்லி எடுத்துக்கொள்ளலாம். இது சளி, இருமல், தலைவலி பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த நிவாரணம் தரும்.

தண்ணீரில் ஆடாதொடா இலை, நொச்சி இலை தலா ஐந்து, நான்கைந்து மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் குடிக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலியில் சிறிது எடுத்து நன்கு இடித்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, தேநீர் போல இனிப்பு சேர்த்தோ, இனிப்பு சேர்க்காமல் கஷாயமாகவோ குடிக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக மழை மற்றும் பனிக்காலத்தில் கூடியவரை வெதுவெதுப்பான நீரையே நாள் முழுவதும் குடிப்பது நல்லது.

மிளகு, சீரகம் இரண்டையும் சுத்தமான துணியில் கட்டி, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரை வெதுவெதுப்பாக அவ்வப்போது குடிக்கலாம்.

எப்போதும் ஃப்ரெஷ்ஷான, சூடான உணவுகளைச் சாப்பிடுவது, குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது போன்றவையும் முக்கியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: தாமரை விதை கீர்!

பியூட்டி டிப்ஸ்: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாகவே இருப்பது இதனால்தான்!

‘ப்ளூலாக்: எபிசோடு நாகி’ – விமர்சனம்!

தினுசு தினுசா பிரச்சனை வருதே – அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *