நெல்லையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் சிராஜ் பாளையங்கோட்டையில் உள்ள பாளையங்கால்வாய் சுத்தம் செய்ய வேண்டி மாநகராட்சி அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளார்.
எத்தனை முறை மனுக்கள் கொடுத்தாலும் பாளையங்கால்வாய் என்பது சாக்கடைகள் கலந்தும் , குப்பையும் கூடமுமாக காட்சியளிக்கிறது.
பாளையங்கால்வாய் என்பது நெல்லை மேலப்பாளையம், குறிச்சி, பாளையங்கோட்டை கீலூர், கோட்டூர், பொட்டல், மணப்படை வீடு , ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது.
தற்பொழுது ஜூன், ஜூலை மாதங்களில் பாபநாசம் அணைகள் திறக்கப்படும். அந்த சமயங்களில் உபரிநீர் பாளையங்கால்வாய்க்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த பாளையங்கால்வாயானது முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. நகரப் பகுதியிலிருந்து பெரும்பாலான வீடுகளில் உள்ள கழிவு நீர் இந்த பாளையங்கால்வாயில் கலக்கின்றன .
மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக இந்த நீர் இல்லை என்றும் பாளையங் கால்வாயை முறையாக பராமரிக்காமல் குப்பைகள் தேங்கி அலங்கோலமாக காட்சியளிக்கிறது என்றும் பலமுறை சிராஜ் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கவில்லை.
இதனால் நெல்லை மக்களை காக்கக்கூடிய நெல்லையப்பரிடமே இனி நேரடியாக நான் மனுக்களை கொடுக்கிறேன் என்று வினோதமாக நெல்லையப்பர் கோவிலுக்கு தான் கைப்பட எழுதிய மனுவோடு இன்று வந்தார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
இதனால் நெல்லையப்பர் கோவில் வாசல் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
சரவணன் நெல்லை.
அமைச்சரவை கூட்டம்: முதல்வரிடம் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை!
“யார் அடிமை?” : ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!