பீட்டர் பால் என் கணவரும் இல்லை, நான் அவரது மனைவியும் இல்லை என்று நடிகை வனிதா விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரான பீட்டர் பாலை, நடிகை வனிதா 2020ஆம் ஆண்டு ஜுன் 27ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி 3ஆவது திருமணம் செய்துகொண்டார்.
தன்னை முறையாக விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக பீட்டர் பாலின் முதல் மனைவி குற்றம்சாட்டியிருந்தார்.
வனிதாவும் பீட்டர் பாலும் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் பிரிந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பால் மரணமடைந்தார்.
பீட்டர் பாலின் பெயரைக் குறிப்பிடாமல் கடந்த ஏப்ரல் 29ஆம்தேதி நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், “நீங்கள் இந்த உலகத்தைவிட்டு சென்றதால் நான் வருத்தமாக உணர்கிறேன். எனினும் நீங்கள் நிச்சயமாக ஒரு சிறந்த இடத்தில் இருப்பதை நான் அறிவேன். ஒரு வழியாக உங்களுக்குச் சாந்தி கிடைத்துவிட்டது. எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்கவும். RIP” என்று பதிவிட்டிருந்தார்.
வனிதாவின் 3ஆவது கணவர் உயிரிழந்தார் என்று செய்தி வெளியான நிலையில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் பீட்டர் பால் தனது கணவரே இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் வனிதா விஜயக்குமார்.
“எதிர்வினையாக ஆற்றலாமா வேண்டாமா என பொறுமையாக யோசித்த பிறகு இதை வெளியிடுகிறேன். நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை, 2020ல் சிறிது காலத்துக்கு உறவிலிருந்தோம்.
நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாகச் செய்தி பரப்புவதை நிறுத்துங்கள்.
நான் சட்டப்பூர்வமாகத் தனிமையில் இருக்கிறேன். எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்றும் என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
ராகுல் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு!
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் நீடிக்கும் மழை!