வரும் மார்ச் 15ம் தேதிக்குப் பிறகு Paytm FASTagsஐ வாடிக்கையாளர்கள் யாரும் பயன்படுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் FASTag என்பது ஒரு டிஜிட்டல் டோல் டிக்கெட் ஆகும். நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்தும் செயல்முறையை நெறிப்படுத்தவும், தானியங்குபடுத்தவும் மின்னணு கட்டண வசூல் அமைப்பாக FasTag என்பது அறிமுகப்படுத்தப்பட்டது.
பணத்தை வசூலிக்க வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அல்லது டேக் மூலம் ரேடியோ-அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
அதாவது பயனரின் FASTag எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். FASTag ஸ்டிக்கர் பொருத்தப்பட்ட வாகனம் டோல் பிளாசாக்கள் வழியாகச் செல்லும்போது பயனரின் கணக்கில் இருந்து தானாகவே சுங்கக் கட்டணங்களைக் வசூலித்துக் கொள்ளப்படுகிறது.
FASTag சேவையை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 32 வங்கிகளின் பட்டியலில் இருந்து பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் லிமிடெட்-ஐ (PPBL) இந்திய ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.
தொடர் விதிமீறிலில் ஈடுபட்டு வந்ததை அடுத்து நிதி நடவடிக்கைகளை நிறுத்துமாறு பிபிபிஎல் நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஆர்பிஐ உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்தநிலையில் வரும் மார்ச் 15ம் தேதிக்குப் பிறகு Paytm FASTagsஐ வாடிக்கையாளர்கள் யாரும் பயன்படுத்த முடியாது என்று தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்கள் FasTag கணக்குகளை ஆன்லைனில் வசதியாக ரீசார்ஜ் செய்து கொள்ள வசதியாக Paytm பயன்படுத்தப்பட்டு வந்தது.
மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு அதனை பயன்படுத்த முடியாத நிலையில், பேடிஎம்-க்கு பதிலாக மாற்று வழிகளை தொழில்நுட்ப நிபுணர்கள் வழங்கி வருகின்றனர்.
அதன்படி, பேடிஎம்க்கு பதிலாக, NHAI FASTag, ஐசிஐசிஐ வங்கி FASTag, ஹெச்டிஎப்சி வங்கி FASTag, எஸ்பிஐ வங்கி FASTag மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி FASTag அறிவிக்கப்பட்டுள்ளன.
பயனர்களுக்கு எந்த வங்கி வசதியோ, அந்த வங்கியின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து FASTag பெறலாம்.
அல்லது குறிப்பிட்ட வங்கி கிளைக்கு நேரில் சென்று FASTag பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அண்ணா, கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸின் ‘SK 23’ கதை இதுதான்?
Comments are closed.