சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை போல நீர்ச்சத்து அதிகம் கொண்டது பப்பாளிக்காய். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவை நிறைந்திருக்கின்றன. வீட்டிலுள்ளவர்களுக்கு ஸ்பெஷலாக என்ன செய்து கொடுக்கலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த பப்பாளிக்காய் மசாலா பராத்தா.
என்ன தேவை?
துருவிய பப்பாளிக்காய் – 150 கிராம்
கோதுமை மாவு – 250 கிராம்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)
பச்சை மிளகாய் – 4
ஓமம் – 2 டீஸ்பூன்
துருவிய வெங்காயம் – 50 கிராம்
கொத்தமல்லித்தழை – அரை கப் (நறுக்கியது)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 50 கிராம்
எப்படிச் செய்வது?
இஞ்சி, பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஓமம் சேர்த்து அதில் நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய வெங்காயம், துருவிய பப்பாளிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு இறக்கி, ஆறியவுடன் கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, கொத்தமல்லித்தழை சேர்க்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு மெல்லிய பராத்தாவாக இட்டு, இரண்டு பக்கமும் எண்ணெய்விட்டுப் பொன்னிறமாக எடுக்கவும்.
குறிப்பு: கோதுமை மாவுக்குப் பதில் மைதா மாவிலும் செய்யலாம். தொட்டுக்கொள்ள காரச் சட்னி சுவையாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கற்பூரவள்ளி சட்னி
கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான்கீரை தோசை
வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கு : 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி இல்லாத கேபினட் கூட்டம்! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை!