கிச்சன் கீர்த்தனா: பப்பாளிக்காய் சோள மசால் வடை!

Published On:

| By Kavi

Papaya corn masala vada

பழங்களில் ‘தி பெஸ்ட்’ என்றால் பப்பாளியைச் சொல்லலாம். ஆனாலும் அதன் அருமை பலருக்கும் தெரிவதில்லை. பழத்தில் மட்டுமல்ல, பப்பாளிக் காயிலும் எண்ணற்ற மருத்துவப் பலன்கள் உள்ளன. இதை குறைந்தது வாரத்தில் இரண்டு முறை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள் அதிகம். இந்த வார வீக் எண்டை பப்பாளிக்காய் ஸ்பெஷலாக்க இந்த பப்பாளிக்காய் சோள மசால் வடை உதவும்.

என்ன தேவை?

வெள்ளை சோளம் – 200 கிராம்

துருவிய பப்பாளிக்காய் – 100 கிராம்

வெங்காயம் – ஒன்று

இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

பூண்டு – 10 பல்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா 3

புதினா (அ) கறிவேப்பிலை – தேவையான அளவு

அரிசி மாவு – 50 கிராம்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – அரை லிட்டர்

எப்படிச் செய்வது?

வெள்ளை சோளத்தை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சோம்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், புதினா (அ) கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதில் துருவிய பப்பாளிக்காய் சேர்த்து, அரிசி மாவு சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி மாவை சிறு சிறு வடைகளாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வெற்றிலைத் துவையல்!

கிச்சன் கீர்த்தனா: பப்பாளிக்காய் மசாலா பராத்தா

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? ஸ்டாலின் மீது கூட்டணித் தலைவர்கள் வருத்தம்!

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறேனா? – சஸ்பென்ஸை உடைத்த பிரபல இயக்குநர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share