நொறுக்குத்தீனி இல்லாத வீக் எண்டு வேஸ்ட் என்றே சொல்லலாம். விடுமுறை நாள்களில் விருந்தே சாப்பிட்டாலும், ஸ்பெஷலாக ஏதாவது இருந்தால்தான் அந்த நாள் நிறைவடையும். அப்படிப்பட்டவர்கள் சத்தான இந்த பசலைக்கீரை கட்லெட் செய்து இந்த வீக் எண்டை என்ஜாய் செய்யுங்கள்.
என்ன தேவை?
பசலைக்கீரை – 5 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – ஒன்று
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 3
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பிரெட் கிரம்ப்ஸ் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கீரையை தண்டு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் சிறிது தண்ணீர் தெளித்து பொடியாக நறுக்கிய கேரட், கீரை, பீன்ஸைச் சேர்த்து நன்கு வதக்கவும். இடை இடையே சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை இதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகுத்தூள் தூவி நன்கு புரட்டவும். சூடு ஆறியதும், இந்தக் கலவையை நன்கு பிசைந்து, கட்லெட் வடிவத்தில் உருண்டையாகவோ அல்லது நீளமாகவோ தட்டிக்கொள்ளவும். இதை பிரெட் கிரம்ப்ஸில் நன்கு புரட்டிக்கொள்ளவும். கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கட்லெட்களை சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை
கிச்சன் கீர்த்தனா : ஸ்வீட் கார்ன் முளைப்பயறு சாலட்
இந்தியன் 2 தோல்வி குறித்து ஆய்வு… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: வக்ஃப் போர்டு புதிய தலைவர் யார்? திமுகவுக்கா, கூட்டணிக்கா?