பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் முகமது ரிஸ்வான். இவர் ஹஜ் புனித யாத்திரையின் போது மெக்காவில் உள்ள பள்ளிவாசலை சுத்தும் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் தங்களது முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
முகமது ரிஸ்வான் இறை பக்தியில் மிகவும் ஆர்வம் உள்ளவர் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த ஒன்றே. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையின் போது மைதனத்திலேயே தொழுகை நடத்தியது. அதேபோல் அமெரிக்காவிற்கு சென்றபோது அங்கு காரில் இருந்து திடீரென இறங்கி சாலை ஓரத்தில் தொழுகை நடத்தினார். பாகிஸ்தான் அணி ஒவ்வொரு முறை வெற்றி பெரும் போதும் இந்த வெற்றி கடவுளால் தான் எங்கள் அணிக்கு கிடைத்தது என்று முகமது ரிஸ்வான் கூறுவது வழக்கமான ஒன்று தான்.
இந்நிலையில், மெக்கா சென்றுள்ள முகமது ரிஸ்வான் அங்கு இருந்த பணியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி தரையை சுத்தம் செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்