டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தினால், அந்நாட்டு பையனை திருமணம் செய்துகொள்வதாக பாகிஸ்தான் நடிகை பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை திருவிழா அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 அணிகளில் சில, அரையிறுதிக்கு தகுதிபெறும் நோக்கில் புள்ளிப்பட்டியலில் இடம்பிடிக்க போட்டிபோட்டு முன்னேறி வருகின்றன.
அந்த வகையில் தற்போது குரூப் 1ல் நியூசிலாந்து அணி முதலிடத்திலும் குரூப் 2ல் இந்திய அணியும் முதலிடத்தில் உள்ளன.
தொடர்ந்து இரு குருப்பிலும் இன்னும் சில போட்டிகள் நடைபெற உள்ளன. அதைப் பொறுத்தே அரையிறுதிக்குள் நுழையும் அணிகள் முடிவு செய்யப்படும்.
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி, அதில் 3ல் வெற்றியும் 1 தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது.
இந்திய அணி, இந்த சுற்றில் நவம்பர் 6ம் தேதி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இதில் இந்திய அணி ஜெயித்துவிட்டால், அரையிறுதி அணிக்குச் செல்வது உறுதியாகிவிடும். இதையடுத்து, இந்தப் போட்டி பல நாட்டு ரசிகர்களையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கடைசி லீக் போட்டியில் இந்தியாவை ஜிம்பாப்வே அணி வீழ்த்தினால் அந்நாட்டு பையனை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வேன்” பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரது பதிவை 4,300க்கும் மேற்பட்ட பயனர்கள் லைக் செய்துள்ளனர். மேலும், 256 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இவர், கடந்த வாரம் வங்காளதேசத்திற்கு எதிரான இந்தியாவின் போட்டியின்போது, “இந்தியா தோற்க வேண்டும்” என்று தொடர்ந்து ட்வீட் செய்து வந்தார்.
இதற்குப் பதிலளித்த நெட்டிசன்கள், “வங்கதேசத்தை இந்தியா தோற்கடித்தால் உங்கள் ட்விட்டர் கணக்கை நீக்க வேண்டும்” என்றும் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
நகம் இல்லாத விரல்கள்: இணையத்தில் வைரல் புகைப்படம்!
டெலிகிராமுக்கு போட்டி: வாட்ஸ்அப் செய்த புதிய மாற்றம்!