Paaladai Kozhukattai Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: பாலடைக் கொழுக்கட்டை!

டிரெண்டிங்

வித்தியாசமான வடிவங்களில் பிள்ளையாரை வைத்து வழிபடும் இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நீங்களும் பிள்ளையாருக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்த கொழுக்கட்டையை வித்தியாசமாக செய்து படைக்க இந்த பாலடைக் கொழுக்கட்டை ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

சிறிய சைஸ் பாலடை – அரை கப்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கேரட் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரிசி மாவு – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாலடையை ஒரு கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேகவிடவும். பிறகு, பட்டாணியையும் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து வெந்ததும் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இதில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும், ஒரு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு தூவி கலந்து விட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இதுதான் பூரணம்.

ஆறியதும் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர் விட்டு உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். நீர் கொதித்த தும் அரிசி மாவைச் சேர்க்கவும். மாவு வெந்ததும் இறக்கி, கை பொறுக்கும் சூடு வந்ததும், மாவை உருட்டி சொப்பு செய்து உள்ளே பூரண உருண்டையை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து 8 நிமிடங்கள் சிம்மில் வேகவைத்து எடுக்கவும். வித்தியாசமான சுவையில் பாலடைக் கொழுக்கட்டை தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப் பூரணக் கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா : எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை!

தேஜஸ்வியுடன் சந்திப்பு… மீண்டும் பல்டியா? மோடிக்கு நெருக்கடியா? நிதீஷ் விளக்கம்!

வார்டன்னா அடிப்போம்… அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *