ஓவர் வொர்க் லோட்… தற்கொலை செய்துகொண்ட ரோபோ! – எங்கே, எப்படி தெரியுமா?

Published On:

| By indhu

தென் கொரியாவின் குமி சிட்டி கவுன்சில் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ரோபோ, மாடிப் படிகளில் சிதறி விழுந்து தற்கொலை செய்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கடந்த சில ஆண்டுகளாக உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி தங்களின் கால் தடங்களை பதித்து வருகின்றன.

இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்து வாழ மனிதர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஒவ்வொரு துறை சார்ந்தும், குறிப்பிட்ட பணிக்காகவும் சில ரோபோக்கள் தயார் செய்யப்படுகின்றன. இவை மனிதர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கத்துடனும், நேர்த்தியான மற்றும் விரைவான பணிக்காகவும் உருவாக்கப்படுகின்றன.

அந்த வகையில், தென் கொரியாவில் பொது மக்களுக்கு உதவும் வகையிலான ஒரு ரோபாட் தயாரிக்கப்பட்டது. அந்த ரோபோட் குமி சிட்டி கவுன்சில் பகுதியில் உள்ள நகரச் சபை அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவுவதற்காக பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்திருந்தது.

கலிபோர்னியாவில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டது. இந்த ரோபோவுக்குத் தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டு கொடுத்துள்ளது.

இந்த ரோபோவிற்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டது. அலுவலகம் வரும் ஊழியர்களிடமிருந்து ஆவணங்களைப் பெற்று, அதிகாரிகளிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளைச் செய்து வந்திருக்கிறது.

இந்நிலையில், அந்த ரோபோ திடீரென தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் ரோபோ விழுந்து நொறுங்கி இருக்கிறது. சேதமடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ரோபோ, அந்த அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததும், மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மழை வரப்போகுதே… குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!

மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? வெளியான புதிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel