திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். மன அழுத்தத்தைப் போக்கி, உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும். அதேநேரம் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கான ஆலோசனைகள் இதோ…
உடற்பயிற்சியைத் தொடங்கும் முன்னர் ‘வார்ம் அப்’ செய்வது நல்லது. இந்தப் பயிற்சிகள் இதயத்துடிப்பை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மூட்டுகளின் இயக்கமும் சீர்பெறும். காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். தோள்பட்டையைச் சுழற்றுதல், ஜாகிங், கையை நீட்டி உட்கார்ந்து எழுதல் (Squats) போன்ற அடிப்படை `வார்ம் அப்’ பயிற்சிகளைச் செய்யலாம்.
உடற்பயிற்சிக்குப் பிறகு ‘ஸ்ட்ரெச்சிங்’ பயிற்சிகள் செய்வது மூட்டுப் பகுதிகளில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கும். தசைகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தைத் தளர்த்தி, இயல்பாக இயங்கச்செய்யும். உடற்பயிற்சிகளால் தசைகளில் ஏற்பட்ட வலி குறைந்து, ரத்த ஓட்டம் சீராகும். தசைகளை இயல்பான நிலைக்குத் திருப்பி, உடல் தோற்றம் மேம்பட உதவும்.
சூரியக் கதிர்கள் அளவுக்கு அதிகமாக உடலில்பட்டால் சன் பர்ன், சருமத்தின் நிறம் மாறுதல் போன்ற பல்வேறு சருமப் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். தொப்பி, முழுக்கைச் சட்டை போன்றவற்றை அணியலாம்.
சாலைகளில் ‘ஜாகிங்’, ‘ரன்னிங்’ போன்ற பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள், தாங்கள் அணியும் காலணிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காலணியின் அடிப்புறத்தில் சரியான ‘குஷனிங்’ இல்லாவிட்டால் ஓடும்போது சுளுக்கு, கண்டஞ்சதையில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: மேத்தி ரைஸ்
பஞ்சாப் ஜெர்ஸி போட்டுக்கொண்டு ‘பெங்களூருக்காக’ விளையாடிய… பட்டைய ‘கெளப்பும்’ மீம்ஸ்கள்!
RCB vs PBKS: ‘தூதுவன் வந்தான்’ வென்றது பெங்களூரு… கோலி கொண்டாடிய ரசிகர்கள்!