ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 9 அன்று நடைபெற்ற ‘It’s Glow Time’ நிகழ்ச்சியில் ஆப்பிள் அறிமுகம் செய்தது.
இதில் ஐபோன் 16 ரூ.79,900 என்ற துவக்க விலையில் அறிமுகமானது. அதேபோல, ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900 என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மறுபுறத்தில், ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900 என்ற விலையில் அறிமுகமானது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900 என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நினையில், இந்த ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை தொடந்து, தனது மற்ற ஐபோன்களின் விலையை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.
அதன்படி, தற்போது ஐபோன் 15 ரூ.69,900 என்ற துவக்க விலையில் விற்பனையாகிறது. ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.79,900 ஆக உள்ளது.
மறுபுறத்தில், ஐபோன் 14 ஸ்மார்ட்போனின் புதிய ஆரம்ப விலை ரூ.59,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 பிளஸ் ரூ.69,900 என்ற புதிய விலையில் விற்பனையாகவுள்ளது.
மேலும், ஐபோன் SE விலை ரூ.47,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனையையும் ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
ஐபோன் 16 விலை என்ன?
ஐபோன் 16
128GB – ரூ.79,900
256GB – ரூ.89,900
512GB – ரூ.1,09,900
ஐபோன் 16 பிளஸ்
128GB – ரூ.89,900
256GB – ரூ.99,900
512GB – ரூ.1,19,900
ஐபோன் 16 ப்ரோ
128GB – ரூ.1,19,900
256GB – ரூ.1,29,900
512GB – ரூ.1,49,900
1TB – ரூ.1,69,900
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்
256GB – ரூ.1,44,900
512GB – ரூ.1,64,900
1TB – ரூ.1,84,900
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: புகைப்பழக்கத்தை நிறுத்த… என்னதான் தீர்வு?
டாப் 10 நியூஸ் : இமானுவேல் சேகரன் நினைவு நாள் முதல் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் வரை!
கிச்சன் கீர்த்தனா : விரால் மீன் ரோஸ்ட்
இளம் தலைமுறையினர் சிகையலங்கார சிக்கல்கள்: தீர்வுகளை நோக்கிய முயற்சிகள்!