அழகு சாதனப் பொருட்கள் பலவற்றில் ஆரஞ்சு சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆரஞ்சுப்பழத்தைக் கொண்டு நீங்கள் மிளிரலாம். இது, சருமத்தை மென்மையாகவும், பட்டுப் போலவும் வைத்திருக்க உதவும். orange juice beauty tips
தோலில் கறுப்புப் படைகள் இருந்தால், ஆரஞ்சுப்பழச் சாற்றைத் தொடர்ந்து தடவினால், படைகள் மறையும். சிலருக்கு, உடலில் திட்டு திட்டாகக் கருமை படர்ந்திருக்கும். ஆரஞ்சுச்சாறுடன், தக்காளிச்சாறு, பசு நெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், கருமை நிறம் மறைந்து முகம் பொலிவடையும்.
ஆரஞ்சுப் பழத்தோலை அரைத்து, பயத்த மாவு, சிறிது பன்னீர் சேர்த்து முகத்தில் மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, முகச்சுருக்கம், கரும்புள்ளிகள், தேமல் மறைந்து பிரகாசமாக ஜொலிக்கும்.
பழத்தோலை நன்றாகக் காயவைத்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். பேன், பொடுகுத் தொல்லை தீரும்.