அடுத்த பத்து நிமிடங்களில் தேவைப்படுகிற அவசர தேவை தொடங்கி, அழகுபடுத்தும் பொருட்கள் வரை இன்று எல்லாவற்றையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கப் பழகிவிட்டோம். Online Beauty Products Things to watch out for
மற்ற பொருட்களை விடுங்கள்… சருமத்திலும் கூந்தலிலும் நேரடியாகப் பயன்படுத்தப் போகிற மேக்கப் பொருட்களை ஆன்லைனில் வாங்கும்போது கூடுதல் கவனம் அவசியம் என்பதையும் ஆன்லைனில் மேக்கப் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்குகிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
மேக்கப் பொருள்களை ஆர்டர் செய்யும் முன் நீங்கள் வாங்கப்போகும் இணையதள பக்கம் நம்பிக்கையானதா என்பதை கவனிக்க வேண்டும்.
கூடுமானவரை ஃபாலோயர்கள், கமென்ட்டுகளை வைத்தே இணைய பக்கங்களின் நம்பகத் தன்மையை ஆராய்ந்து விட முடியும். கண்டுபிடிக்க முடியாத சூழலில் அந்த இணைய பக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
குறிப்பிட்ட அந்தப் பொருள் வேறு எந்த இணைய பக்கத்திலும் கிடைக்கவில்லை என்றால் ‘கேஷ் ஆன் டெலிவரி’ ஆப்ஷன் இருக்கிறதா என்பதை செக் செய்து ஆர்டர் செய்யுங்கள்.
நீங்கள் எந்த பிராண்டின் மேக்கப் பொருள் களை வாங்குகிறீர்களோ, அந்த பிராண்டின் இணையதள பக்கத்திலேயே வாங்குவது நல்லது.
நீங்கள் வாங்கவிருக்கும் பொருளின் உண்மைத்தன்மையை சோதிக்க அதன் லோகோ, பிராண்டின் பெயரில் இருக்கும் எழுத்துகள் போன்றவற்றை செக் செய்யுங்கள்.
சில நேரங்களில், காலாவதியாகப் போகும் பொருட்களை ஆஃபரில் விற்பனை செய்வார்கள். வாங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில் அந்தப் பொருள் காலாவதியாகிவிடும். எனவே, காலாவதி தேதியை கவனிப்பது அவசியம்.
சில பிராண்டின் பொருட்களை ஓப்பன் செய்துவிட்டால் ரிட்டர்ன் வாங்க மாட்டார்கள். எனவே ரிட்டர்ன் பாலிசியையும் கவனத்தில் கொள்ளவும்.
ஒரு பொருளை ஆர்டர் செய்யும் முன் அதன் விலையை வெவ்வேறு இணைய பக்கங்களில் செக் செய்வதைவிட, அதை விற்கும் ஷோரூம்களில் அதன் விலையை செக் செய்து ஆன்லைனில் விலை குறைவாக இருந்தால் ஆன்லைனில் வாங்குங்கள்.
ஆஃபரில் கிடைக்கிறது என்பதற்காக ஒரே நேரத்தில் ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்டு வாங்காதீர்கள். அந்தப் பொருள் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், காலாவதியாகும் தேதியை நெருங்கிக் கொண்டிருக்கலாம். எனவே தேவைக்கு ஏற்ப ஆர்டர் செய்து பயன்படுத்துங்கள்.
ஆன்லைனில் வாங்கிய பொருள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால், அந்தப் பொருளைப் பயன்படுத்துவதை உடனே நிறுத்துங்கள். சரும மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். Online Beauty Products Things to watch out for
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட்!
என்னிடம் இருந்து ஒரு பைசா கூட கைப்பற்றவில்லை: ரெய்டுக்குப் பின் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!