சீனாவை தலைமையிடமாக கொண்டு ஸ்மார்ட்போன் உட்பட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வரும் ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
குறைந்த விலையில் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருவது தான் ஒன்பிளஸ் மீதுள்ள அதிக எதிர்பார்ப்புக்கு காரணம்.
இந்த சூழலில், டெக்மாஸ்டர் முகுல் ஷர்மா ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன், நாய்ஸ் இயர்போன் நார்டு ஸ்மார்ட்வாட்ச், நார்டு பேண்ட் ஆகியவற்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
இது ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன்:
- 6.7 இன்ச் திரை AMOLED டிஸ்பிளே
- 120Hz. ரெப்ரெஷ் ரேட்
- 8100 மீடியாடெக் டைமென்சிட்டி,
- 4500mAh திறன் கொண்ட பேட்டரி. 150 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி.
- ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 புராசஸர்.
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் ஆகியவற்றோடு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நாய்ஸ் இயர்போன்
ஒன்பிளஸ் நாய்ஸ் இயர்போன் நாளை உலகம் முழுவதும் வெளிவர உள்ளது.
9.2mm டைனாமிக் டிரைவரை கொண்ட நாய்ஸ் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 100+ மணி நேர பிளேபேக் பேக்கப் வழங்குகிறது.
இதன் விலை 2000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தாச்சு ‘ரியல்மி 9 ஐ’: என்னென்ன அம்சங்கள் ?