ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது நிறுவனத்தின் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப் பொருத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போனான ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் அறிமுகமான ஒன்ப்ளஸ் எஸ் 3 ஸ்மார்ட்போனின் ரீ-பிராண்டெட் வெர்சனான இந்த ஸ்மார்ட்போனுடன், ஒன்ப்ளஸ் நிறுவனம் ‘ஒன்ப்ளஸ் 12R’ என்ற மற்றொரு ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது.
ஒன்ப்ளஸ் 12, 12R ஸ்மார்ட்போன்களின் விலை என்ன?
ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போன் 2 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. அதில் 12GB RAM & 256GB சேமிப்பு கொண்ட அடிப்படை வகை ரூ.64,999 என்ற விலைக்கும், 16GB RAM & 512GB சேமிப்பு கொண்ட வகை ரூ.69,999 என்ற விலைக்கும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எமரால்டு மற்றும் கருப்பு என 2 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
அதேபோல, ஒன்ப்ளஸ் 12R ஸ்மார்ட்போனும் 2 வகைகளிலேயே அறிமுகமாகியுள்ளது. 8GB RAM & 128GB சேமிப்பு கொண்ட ஒன்ப்ளஸ் 12R ரூ.39,999 என்ற விலைக்கும், 16GB RAM & 256GB சேமிப்பு கொண்ட ஒன்ப்ளஸ் 12R ரூ.45,999 என்ற விலைக்கும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் & சாம்பல் என 2 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
ஒன்ப்ளஸ் மற்றும் அமேசான் தளங்களில், ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போன் ஜனவரி 30 அன்றும், ஒன்ப்ளஸ் 12R ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6 அன்றும் விற்பனைக்கு வரவுள்ளது.
ஒன்ப்ளஸ் 12 சிறப்பம்சங்கள் என்ன?
2 நானோ சிம் வசதியுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப் பொருத்தப்பட்டு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14 கொண்டு இயங்கும் இந்த ஒன்ப்ளஸ் 12, 6.82-இன்ச் குவாட்-HD+ திரை, கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, 4,500 நிட்ஸ் ஒளிர்வு, 120Hz திரை புதுப்பிப்பு விகிதம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்த ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போன், 50MP முதன்மை கேமரா, 48MP அல்டரா-வைட் கேமரா, 64MP டெலிபோட்டோ கேமரா என 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபிக்களுக்காக 32MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், 5G, வை-பை 7, ப்ளூடூத் 5.4 போன்ற வசதிகளை கொண்ட இந்த ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போனில், 100W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வையர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடனான 5,400mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
ஒன்ப்ளஸ் 12R சிறப்பம்சங்கள் என்ன?
2 நானோ சிம் வசதியுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் பொருத்தப்பட்டு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14 கொண்டு இயங்கும் இந்த ஒன்ப்ளஸ் 12, 6.78-இன்ச் 1.5K (1,264 x 2,780 பிக்சல்) திரையை கொண்டுள்ளது.
இந்த ஒன்ப்ளஸ் 12R ஸ்மார்ட்போன், 50MP முதன்மை கேமரா, 8MP அல்டரா-வைட் கேமரா, 2MP மேக்ரோ கேமரா என 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபிக்களுக்காக 16MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், 5G, வை-பை 7, ப்ளூடூத் 5.3 போன்ற வசதிகளை கொண்ட இந்த ஒன்ப்ளஸ் 12R ஸ்மார்ட்போனில், 100W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடனான 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வையர்லெஸ் சார்ஜிங் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!
பிப்ரவரி 26 முதல் ஜாக்டோ – ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்!
வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!
4 மாவட்டங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை: எங்கெல்லாம் தெரியுமா?