ஒரு வார்த்தை ட்விட்டர் பதிவின் மூலம் தங்களது அடுத்தப் படத்தின் அப்டேட்டுகளை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நேற்று (செப்டம்பர் 2) ட்விட்டரில் ஒரு வார்த்தை ட்வீட் ட்ரெண்டானது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி திரைப் பிரபலங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் ஒரு வார்த்தையில் ட்வீட் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இன்று (செப்டம்பர் 3) ஒரு வார்த்தை ட்விட்டர் பதிவில் தங்களது அடுத்தப் படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 42-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.
அதனைக் குறிக்கும் வகையில் #Suriya42 என்ற ஒற்றை ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் 61-வது திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக #Chiyaan61 என்ற ஹேஷ்டாக் பகிர்ந்துள்ளனர்.
இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா, சிம்பு நடிக்கும் பத்து தல படத்தை இயக்குகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை டிசம்பர் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தை குறிக்கும் வகையில், #PathuThala என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
ஒரு வார்த்தை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தங்களது அடுத்தப் படங்களின் அப்டேட்டுகளை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செல்வம்
அரசு விருது பட்டியலில் நயன்தாரா, ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், திருமதி செல்வம்