சாம்சங், மோட்டோரோலா மற்றும் ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக, ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டு ஸ்மார்ட்போனான ‘OnePlus Open’ போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
‘ஒன்ப்ளஸ் ஓபன்’ சிறப்பம்சங்கள் என்ன?
பிரம்மாண்ட 7.82-இன்ச் AMOLED உட்திரையை இந்த ‘ஒன்ப்ளஸ் ஓபன்’ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 6.31-இன்ச் அளவிலான வெளித்திரை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. 2 திரைகளுமே 120Hz திரை புதுப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளன. மேலும், 2,800 நிட்ஸ் ஒளிரும் திறனையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த திரைகள், டியூவி ரெய்ன்லாந்து நிறுவனத்தால் கண்களுக்கு பாதுகாப்பானது என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
2 நானோ சிம் வசதிகொண்ட இந்த ‘ஒன்ப்ளஸ் ஓபன்’ போனில், அட்ரினோ 740 GPU உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13, OxygenOS 13.2 சாப்ட்வேரை கொண்டு இயங்குகிறது.
67W சூப்பர் VOOC சார்ஜிங் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 4,800mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 5G, 4G LTE, வை-பை 7, ப்ளூடூத் 5.3, USB டைப்-C போர்ட் ஆகிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.
இவ்வளவு சிறப்பான கேமராவா?
கேமராவை பொறுத்தவரை, இந்த ‘ஒன்ப்ளஸ் ஓபன்’ ஸ்மார்ட்போன் அற்புதமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த போனில் 3 பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.
– முதலாவதாக, சோனி ‘பிக்சல் ஸ்டாக்டு’ CMOS சென்சார் கொண்ட 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
– 120 மடங்கு ஜூம் செய்துகொள்ளும் திறனுடன், ஆம்னிவிஷன் OV64B சென்சார் கொண்ட 64 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா
– சோனி IMX581 சென்சார் கொண்ட 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா
செல்ஃபிக்களை பொறுத்தவரை, 2 திரைகளுமே 2 கேமராக்களை கொண்டுள்ளது. அதன்படி, உட்புற திரையில் 20 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வெளிப்புற திரையில் 32 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
‘ஒன்ப்ளஸ் ஓபன்’ விலை எவ்வளவு தெரியுமா?
16GB ரேம் மற்றும் 512GB சேமிப்பு என ஒரு வகையில் அறிமுகமாகியுள்ள இந்த ‘ஒன்ப்ளஸ் ஓபன்’ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,39,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், எமரால்டு டஸ்க் மற்றும் வொயேஜர் பிளாக் என 2 வண்ணங்களில் கிடைக்கப்பெற உள்ளது.
ஒன்ப்ளஸ் மற்றும் அமேசான் ஆகிய தளங்களில், இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 27 அன்று விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அதற்கான முன்பதிவு இன்றே துவங்குவதாக ஒன்ப்ளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
ஈஷாவின் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேசிய விருது!
ஆசிரியர் முதல் ஆன்மீக அம்மா வரை! யார் இந்த பங்காரு அடிகளார்?