எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க பெட்ரோல் வாகனங்களின் பயன்பாடு குறைகிறது என்றே சொல்லலாம்.
முன்பெல்லாம் சாலைகளில் ஒன்று அல்லது இரண்டு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை மட்டுமே பார்க்க முடியும் ஆனால் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளதை காண முடிகிறது.
அந்தவகையில் இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனமான ஓலா தனது அடுத்த படைப்பை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.
தற்போது ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 ஏர் மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ என்ற இரண்டு மாடல் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த இருசக்கர வாகனங்களின் விலை ஓலா எஸ்1 ஏர் ரூ.1.10 லட்சம் ரூபாய்க்கும் ஓலா எஸ்1 ப்ரோ 1.4 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஓலா நிறுவனத்தின் முதல் படைப்பான ஓலா எஸ் 1 மாடல் இருசக்கர வாகன தயாரிப்பை கடந்த வருடத்துடன் நிறுத்தியது. இது குறைந்த விலையில் ஓலா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் எப்போது ஓலா எஸ் 1 தயாரிப்பை துவங்கும் என்று காத்திருக்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
இப்போது அறிமுகப்படுத்தப்போகும் இருசக்கர வாகனத்தை பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஓலா நிறுவனத்திடம் இருந்து கிடைக்கவில்லை.
ஆகஸ்ட் 15ல் வெளிவரப்போவது ஓலா எஸ்1 எக்ஸ் மாடலாகவும், அது ஓலா நிறுவனத்தின் மிக குறைந்த விலை கொண்ட இருசக்கர வாகனமாகவும் இருக்கலாம் என்ற செய்தி கசிந்து வருகிறது.
இந்த ஓலா எஸ்1 எக்ஸ் மாடல் இருச்சர வாகனம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்கக்கூடும் என்ற எதிப்பார்ப்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடைசியாக வெளிவந்த ஓலா நிறுவனத்தின் ஓலா எஸ்1 ஏர் இருசக்கர வாகனத்தை 125கிமீ திறனில் உருவாக்கி, அதற்க்கு இணையான திறன் கொண்ட பேட்ரோல் வாகனங்களுக்கு தலைவலியை தந்தது.
அதேபோல் தற்போது ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் விலையில் 100கிமீ திறனில் உருவாக்கி, 125cc திறன் கொண்ட பெட்ரோல் வாகனங்களுடன் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
எது கறுப்பு நாள்? முதல்வர் ஸ்டாலினை சாடிய அண்ணாமலை
“மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டாள்” – நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய ராகுல்