இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது ஓலா நிறுவனம்.
இந்நிறுவனம் முதன் முதலாக தங்களது எஸ் 1 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு கால் பதித்தது.
எஸ் 1 ஏர் ஸ்கூட்டர்கள் தற்போது விற்பனை ஆகி வரும் சூழலில் ஓலா நிறுவனம் நேற்று (ஆகஸ்ட் 15) எஸ் 1 எக்ஸ் மாடல் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டருக்கு ஆரம்ப விலையாக ரூபாய் 79,999 என்று ஓலா நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.
இந்த புதிய எஸ் 1எக்ஸ் ஸ்கூட்டர்கள் முன்பக்கம் உயரமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் டோன் பெயிண்ட் பினிஷ் போன்றவையும் உள்ளது. இதில் எஸ் 1 எக்ஸ் மற்றும் எஸ் 1 எக்ஸ் + என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன.
இதன் என்ட்ரி லெவல் ஸ்கூட்டரான எஸ் 1 எக்ஸ் 2KWH பேட்டரி பேக் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 85 KMPH செல்லக்கூடியது. இதனால் 40 கிலோமீட்டர் வேகத்தை 4.1 நொடிகளில் அடைந்துவிடமுடியும். இது ஒரே சார்ஜில் 91 கிலோமீட்டர் வரை செல்லும்.
இதேபோல 3KWH பேட்டரி பேக் மற்றும் 4KWH பேட்டரி பேக் ஆப்ஷன்களிலும் இந்த ஸ்கூட்டர் நமக்கு கிடைக்கும். இதில் அதிகபட்சமாக 151 கிலோமீட்டர் தூரம் செல்லலாம்.
இதில் 3.5 இன்ச் டிஸ்பிளே வசதியும், டாப் மாடலில் 5 இன்ச் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இதை தவிர கீலேஸ் லாக் மற்றும் அன்லாக் வசதி, ஸ்மார்ட் கனெக்டிவிட்டி போன்ற கூடுதல் வசதிகளும் வருகின்றன. மேலும் நேவிகேஷன், ப்ளூடூத் காலிங், ரிவர்ஸ் மோட், 34 லிட்டர் பூட் ஸ்பேஸ், டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் மற்றும் 7 கலர் ஆப்ஷன்களிலும் விற்பனையாகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“நம்ம கார்ல ஏத்துப்பா” : விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஆ.ராசா