200 பொறியாளர்களைப் பணியிலிருந்து நீக்கிய ஓலா
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் ஒன்றாக விளங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் பெரிய முதலீட்டுடன் களத்தில் இறங்கிய ஓலா தற்போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
ஓலா நிறுவனம் ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவையை அளித்து வந்த நிலையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களைக் கைப்பற்றி எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியது.
எல்லாம் சரியாகச் சென்று கொண்டு இருக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து மற்றும் இத்துறையில் முன்னணி இரு சக்கர நிறுவனங்களின் வருகை ஆகியவை ஓலா-வை தடுமாறச் செய்துள்ளது.
இதன் விளைவு 200 பொறியாளர்களை ஓலா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து ஓலா நிறுவனம் கூறுகையில் ’தற்போது ஓலா நிறுவனம் மென்பொருள் அல்லாத துறையில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் 500 பொறியாளர்களைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று திட்டமிட்டுருந்ததாகவும் முதல் கட்டமாக 200 பொறியாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகவும்,
அடுத்த 18 மாதத்தில் இன்ஜினியரிங் பிரிவில் 5000 ஊழியர்களைச் சேர்க்கவும் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஓலா நிறுவனம் 2000 க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குறைந்த விலை-அசத்தல் அம்சங்கள்: சந்தைக்கு வந்த ஓலா எஸ்1!
பாஜகவில் இணைந்தார் அம்ரீந்தர் சிங்