பியூட்டி டிப்ஸ்: ஆடைகள் விஷயத்தில் அலுவலகத்தில் அசத்த!

டிரெண்டிங்

அலுவலகத்துக்கான ஆடைத் தேர்வில் மைல்டு நிறங்களில் கவனம் செலுத்துங்கள். டிசைன்களை பொறுத்தவரை பெரிய பெரிய டிசைன்களை விட பிளெயின் அல்லது கோடுகள் போட்ட டிசைன்கள் பொருத்தமாக இருக்கும்.

ஜீன்ஸ் – குர்தா, ஜீன்ஸ் – ஷர்ட், ஜீன்ஸ் – டி-ஷர்ட், குர்தா – லெகின்ஸ், சல்வார், புடவை , ஸ்கர்ட் என நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு எந்த வகையான ஆடை பொருத்தமாக இருக்கிறதோ அதைத் தேர்வு செய்யலாம்.

அலுவலகத்துக்கு மிக இறுக்கமான ஆடைகளைத் தேர்வு செய்யாதீர்கள்.

அதிகப்படியான எம்ப்ராய்டரி அல்லது ஸ்டோன் வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.

டிரெண்டுக்கு ஏற்ப ஸ்டைலிங் செய்வதைவிட உங்களின் வேலைக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்து அணியும்போது நேர்த்தியான புரொஃபஷனல் லுக்கில் காட்டும்.

அலுவலக ஆடைகளுக்கு சிங்கிள் ஸ்டோன் நகைகள் பொருத்தமாக இருக்கும்.

அலுவலக விசேஷங்களுக்கு புடவை உங்களுடைய சாய்ஸ் எனில், நெட்டடு, பிரின்ட்டடு காட்டன், சில்க் காட்டன், செமி சில்க், சாஃப்ட் சில்க் என நிறைய வகைகள் இருக்கின்றன. உங்கள் நிறத்துக்கேற்ப தேர்வு செய்து அணியுங்கள்.

இதுபோன்ற கிராண்ட் லுக்கிற்கு போல்கி, குந்தன் செட், அணிகலன்கள் கூடுதல் அழகு சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கேலோ இந்தியாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் இதுதான் : மேடையில் உடைத்த உதயநிதி

சிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் கமல்

இனி Paytm-ல் பண பரிமாற்றம் கிடையாது : ரிசர்வ் வங்கி அதிரடி!

பிஜேபி கூட்டணிக் குழு: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *