மருமகளுக்கு ’மறுமணம்’ செய்து வைத்த மாமனார்

டிரெண்டிங்

தனது மகனின் திடீர் மரணத்துக்கு பிறகு விதவையான தனது மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனாரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒடிசா மாநிலம் தேன்கனிக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நபின் நந்தா.

இவரது மகன் சம்பீத் திருமணமான சிலநாட்களிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அதுமுதல் தனது வீட்டுக்கு செல்லாமல் மாமனார் வீட்டிலேயே மருமகள் மதுஸ்மிதா இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது மருமகளுக்கு வாழ்க்கை அமைத்து கொடுக்கும் நோக்கில் மணமகனை தேடி வந்தார் நபின் நந்தா.

அதன்படி பாலசோர் மாவட்டத்தை சேர்ந்த சிவ சந்தன் என்பவருக்கு தனது மருமகள் மதுஸ்மிதாவை மறுமணம் செய்து வைத்துள்ளார்.

இவர்களது திருமணம் புவனேஸ்வரில் உள்ள நயபள்ளி பகுதியில் உள்ள லட்சுமி கோயிலில் இந்து முறைப்படி உற்றார் உறவினர்கள் சூழ எளிமையாக தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 அன்று நடைபெற்றது.

“எங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்து, இப்போது மகளாக போகிறார்” என்று முன்னாள் எம்.எல்.ஏ நவீன் நந்தாவின் ட்விட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டின் 74வது குடியரசு தினம் கொண்டாடி வரும் இன்றைய காலத்திலும் கிராமப்புறங்களில் பெண்களுக்கு மறுமணம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு நிலையே உள்ளது.

இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தானே முன்னின்று தனது மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த சம்பவம் சமூகத்தில் சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மரணம்

சென்னையின் இளம் பெண் கவுன்சிலர் கைது!

+1
1
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *