நாய்ஸ்ஃபிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச்: அசத்தும் அம்சங்கள் : என்னென்ன தெரியுமா?
ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் புதுபுது தொழில்நுட்பங்களுடன் NoiseFit Core2 ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. ரெட்மி,ரியல்மீ, சாம்சங், பிட்ஷாட், ஒன்பிளஸ் என போட்டி போட்டுக்கொண்டு, பல நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்து வருகின்றன.
இதில் நாய்ஸ் நிறுவனம் அவ்வப்போது தனது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிதாக நாய்ஸ்பிட் கோர்2 ஸ்மார்ட் வாட்சை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
அதன் முழு விபரங்கள் இதோ:
- 1.28 இன்ச் scratch-resistant தொடுதிரை .
- 39.2 கிராம் எடை
- எல்.சி.டி டிஸ்பிளே
- 240X240 பிக்சல் ரெசல்யூஷன்,
- ஐபி68 டஸ்ட் & வாட்டர்-ரெசிஸ்டண்ட் ரேட்டிங்
- ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களில் இந்த ஸ்மார்ட் வாட்ச் இயங்கும்
- 230 mah பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ரத்த ஆக்சிஜன் அளவு சென்சார், பயணித்த தூரம், அதோடு சுவாசம், தூக்கம் மற்றும் ஸ்ட்ரெஸ் போன்றவற்றை கணக்கிடுவதுடன் 50 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை இந்த வாட்ச் கொண்டுள்ளது.
- NoiseFit Core2 ஆனது கேமரா கட்டுப்பாடுகள், மியூசிக் கண்ட்ரோல், ஃபிளாஷ் லைட், ஃபைண்ட் மை ஃபோன், டோன்ட் டிஸ்டர்ப் மோட், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர், பில்ட்-இன் , அழைப்பாளர் பெயர் தகவல், அழைப்பு நிராகரிப்பு மற்றும் பல கூடுதல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது.
கருப்பு , பச்சை,நீலம்,சாம்பல், பிங்க் என 5 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச்சை நாய்ஸ் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் பிளிப்கார்ட் மூலம் பெற்றுக்கொள்ளலாம்..
இதன் அசல் விலை ரூ.3,999 ஆக இருப்பினும் தற்போது அறிமுக சலுகையாக இந்த வாட்ச் ரூ.1,799-க்கு விற்பனைக்கு வந்துள்ளது..
- க.சீனிவாசன்
மிவி நிறுவனத்தின் குறைந்த விலை இயர்பட்ஸ்!