நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்ஸ், நெக்பேண்ட், உள்ளிட்ட, புது புது கேட்ஜெட்களை அறிமுகம் செய்யும் பல்வேறு நிறுவனங்களுக்கு சவால் விடும்படி நாய்ஸ் நிறுவனம் அவ்வப்போது தனது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது புதிதாக நாய்ஸ் எக்ஸ்டிரீம் என்ற நெக்பேண்ட் ரக இயர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் சமீபத்தில் கனெக்ட் செய்யப்பட்ட சாதனத்துடன் தானாக கனெக்ட் ஆகும் வசதி கொண்டது. இந்த இயர்போன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டது.
இவை என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டுள்ளது. இதன்மூலம் அழைப்புகளின் போது ஏற்படும் வெளிப்புற சத்தத்தை இந்த அம்சம் பெருமளவு குறைத்து விடும்.
இதன் பேட்டரி பேக்கப்பை பொறுத்தவரை, முழு சார்ஜ் செய்தால் நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் 100 மணி நேரத்துக்கும் அதிகமாக பிளேபேக் வழங்கும். அதுமட்டுமல்லாமல், இந்த இயர்போன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 20 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
நாய்ஸ் எக்ஸ்ட்ரீம் நெக்பேண்ட் இயர்போன் தண்டர் பிளாக், பிலேசிங் பர்பில் மற்றும் ரேஜிங் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதனை நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மிவி யின் புதிய சவுண்ட் பார்: குறைந்த விலையில் அறிமுகம்!