Noise ColorFit Icon 2

ரூ.2000 விலையில் சூப்பரான ஸ்மார்ட் வாட்ச்!

டிரெண்டிங்

தற்போதைய காலகட்டமானது ஸ்மார்ட் சூழ் உலகு என்றே சொல்லலாம். ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் ரிங் என எடுத்த அனைத்திலும் ஸ்மார்ட் மற்றும் ஸ்டைலை எதிர்பார்க்கும் மக்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது மறுக்க முடியாத உண்மை.

ஸ்மார்ட் வாட்ச் முதன் முதலில் அறிமுகமானது தொடங்கி இன்று வரை அதற்கான மவுசு குறையாமல் தான் இருக்கிறது. கொஞ்சம் நல்ல ஸ்டைலான ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டும் என்றால், அதற்கான பட்ஜெட்டும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.

அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்பதற்காக Noise நிறுவனம் ஒரு ஸ்டைலான, பட்ஜெட்டிற்குள்ளான ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

Noise ColorFit Icon 2 Elite Edition என்ற ஸ்மார்ட் வாட்ச் மாடலை Noise நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.1999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் 2 Elite Edition ஸ்மார்ட் வாட்ச் ஆனது நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் 2 மாடலின் ப்ரீமியம் வேரியன்ட் ஆகும்.

ப்ளுடூத் அழைப்புகள், தினசரி ரிமைண்டர், வானிலை என பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் 2 Elite Edition ஸ்மார்ட் வாட்ச் எலைட் ப்ளாக் மற்றும் எலைட் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. Noise இணையதளம் மற்றும் அமேசான் தளத்தில் விற்பனையில் உள்ளது. இதில் AI வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளது கூடுதல் அம்சம்.

Noise ColorFit Icon 2

Noise ColorFit Icon 2 Elite Edition ஸ்மார்ட் வாட்ச் குறித்த விவரங்களை பார்க்கலாம்:

டிஸ்ப்ளே: 1.8 இன்ச் AMOLED,

ரெசல்யூசன்: 368 x 448 pixels,

ப்ரைட்னஸ்: Up to 500 nits,

ப்ளுடூத்: v5.1,

ஸ்போர்ட்ஸ் மோட்: 60க்கும் மேற்பட்டவை,

வாட்ச் முகப்பு: 150க்கும் மேற்பட்ட முகப்புகள்,

உடல்நிலை கண்காணிப்பு: இதயதுடிப்பு, தூக்கம், மனஅழுத்தம்,

Spo2 மற்றும் பெண்களின் மாதாந்திர உடல்நிலை கண்காணிப்பு.

உற்பத்தித்திறன் தொகுப்பு: தினசரி ரிமைண்டர், வானிலை முன்னறிவிப்புகள்,

பேட்டரி திறன்: 7 நாட்கள் (ப்ளுடூத் அழைப்புகளுடன் 2 நாட்கள்),

நீர் மற்றும் தூசி எதிர்ப்பு: IP68 rating,

கூடுதல் அம்சங்கள்: AI வாய்ஸ் அசிஸ்டன்ட், விளையாட்டு, கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல், அறிவிப்புகள்.

இப்படியான பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள Noise ColorFit Icon 2 Elite Edition ஸ்மார்ட் வாட்ச் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்மார்ட் வாட்ச்களுக்கு சவால் விடும் வகையில் களம் இறங்கி உள்ளது.

-பவித்ரா பலராமன்

உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை வழங்கிய அமெரிக்கா

‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *