இந்த ஆண்டு (2022) இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு நேற்று (அக்டோபர் 3) மருத்துவ துறைக்கான பரிசுடன் தொடங்கியது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கர் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக இன்று (அக்டோபர் 4 ) அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (அக்டோபர் 5) வேதியலுக்கான நோபல் பரிசும் அதனைத் தொடந்து பிற துறைகளுக்கன நோபல் பரிசும் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்பட உள்ளன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கலவரமான கால் பந்துக் களம்! இந்தோனேசியாவில் என்ன நடக்கிறது?
ஆறு பேர் உயிரைக் குடித்த கொள்ளிடம்! அனைத்து உடல்களும் மீட்பு!