தமிழகத்தில் பைக் டாக்ஸி இயங்க தடையில்லை என்று அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு பைக் டாக்ஸி தொழிலாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதில் பைக் டாக்ஸிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் மாநில அரசுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் வருவாயும் கிடைக்கிறது. தேவையான நேரத்தில் வேலை, போதிய வருமானம் போன்றவற்றை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியாக ஒருவர் சுதந்திரம் பெறுவதோடு, பைக் டாக்ஸி தொழில் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு செய்கிறது.
இத்தகைய சூழலில் பைக் டாக்ஸி தொழிலாளர்களுக்கு ஆதரவளித்த முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் நிலையான வருமானத்தை ஈட்டி, தொழிலாளர்கள் கண்ணியமிக்க வகையில் வாழ முடியும். மேலும் அரசுடன் ஒருங்கிணைந்து அனைவருக்குமான நிலையான போக்குவரத்தை வழங்குவதற்கு உறுதுணையாக இருப்போம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : காங்கிரஸ் போராட்டம் முதல் சென்னைக்கு ரெட் அலர்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா : முள்ளங்கிச் சட்னி
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: அனுஷம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: விசாகம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: சுவாதி!
”பாஜக மீது எடப்பாடிக்கு பயமும் அதிகம்… பாசமும் அதிகம்” : கே.என்.நேரு விமர்சனம்!