நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன்… வைரலாகும் சேலை!

Published On:

| By christopher

nirmala sitharaman saree goes viral

பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்துள்ள கசவு சேலை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. nirmala sitharaman saree goes viral

ஒவ்வொரு முறையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அவர் அணிந்து வரும் சேலையும் வைரல் செய்தியாக மாறிவிடுகிறது.

இந்த நிலையில் 8வது முறையாக இன்று (பிப்ரவரி 1) பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் அணிந்து வந்துள்ள மதுபானி ஓவியத்துடன் கூடிய தங்க நிற பார்டர் கொண்ட வெள்ளை கசவு சேலை தற்போது இணையத்தில் தேடலை உருவாக்கியுள்ளது.

பீகாரின் மதுபானி மாவட்டத்தில் மிதிலா பகுதியில் வரையப்படும் ஓவியம் மதுபானி அல்லது மிதிலா ஓவியம் என்ற அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக பல்வேறு சமூகங்களின் பெண்களால் உருவாக்கப்படும் இந்த ஓவியம் புகழ்பெற்றது.

தூலாரி தேவி அளித்த பரிசு! nirmala sitharaman saree goes viral

nirmala sitharaman saree goes viral

கடந்த நவம்பர் மாதம் மிதிலா கலை நிறுவனத்தில் கடன் உதவி நடவடிக்கைக்காக மதுபானிக்கு நிர்மலா சீதாராமன் சென்றிருந்தார். அப்போது அவரை சந்தித்த பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ துலாரி தேவி அவருக்கு மதுபானி ஓவியம் கொண்ட கைத்தறி கசவு சேலையை பரிசாக வழங்கினார். மேலும் அதனை பட்ஜெட் தினத்திற்கு அணியுமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் துலாரி தேவி கேட்டுக்கொண்டபடியே, மதுபானி கலைக்கு மரியாதை அளிக்கும் விதமாக, அவர் பரிசளித்த சேலையை அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர்.

நிதியமைச்சரின் பட்ஜெட் சேலை ஒரு பார்வை!

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட் அமர்வில், நிதியமைச்சர் சீதாராமன் தங்க எல்லைகளைக் கொண்ட இளஞ்சிவப்பு மங்களகிரி பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.

2020 ஆம் ஆண்டுக்கு, பச்சை நிறக் கோடுகள் கொண்ட மஞ்சள் பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்தார்.

தனது மூன்றாவது பட்ஜெட்டுக்கு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்ட போச்சம்பள்ளி பட்டுப் புடவையை அணிந்தார்.

2022ஆம் ஆண்டு போம்காய் சேலையையும், கடந்த ஆண்டு, மெஜந்தா பார்டர் கொண்ட தங்க நிற கோடுகள் கொண்ட வெள்ளை நிற சேலையை நிர்மலா சீதாரமன் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share