பழைய பொலிடிக்கல் வாகனங்கள்: நாடாளுமன்றத்தில் நகைச்சுவை செய்த நிர்மலா

டிரெண்டிங்

பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொலியூடிங் என்ற வார்த்தையை மாற்றி உச்சரித்ததால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

2023-24 பட்ஜெட் தாக்கலின் போது பொல்யூட்டிங் என்பதற்குப் பதிலாக பொலிட்டிகல் என்று கூறியது நாடாளுமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், மோடி அரசின் பல்வேறு முக்கிய திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம், உஜ்வாலா திட்டம், ஜன்தன் திட்டங்களின் சாதனைகளை நிதியமைச்சர் தன்னுடைய உரையில் பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், காலாவதியான பழைய வாகனங்களை அகற்ற மத்திய மாநில பங்களிப்போடு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றார்.

இது குறித்து விளக்கமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, ”பழைய பொலிட்டிக்கல் (அரசியல்)… ஓ சாரி, பொலியூட்டிங் வாகனங்கள். நான் கூறியது ஒருவேளை பொருந்தும். நமது பொருளாதாரத்தைப் பசுமையாக்குவதில் இது ஒரு முக்கிய பகுதியாகும்” என்று நகைச்சுவையாகப் பேசினார்.

நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியவுடன் நாடாளுமன்றம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

நிர்மலா சீதாராமன் இவ்வாறு நகைச்சுவையாகப் பேசியது காங்கிரஸ் கட்சியைக் கிண்டல் அடித்ததாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மோனிஷா

14 வருடங்களுக்குப் பின் விஜய்யுடன் இணையும் த்ரிஷா

மத்திய பட்ஜெட் : அரசியல் தலைவர்களின் வரவேற்பும்; எதிர்ப்பும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *