புகைப்பட கேமராவிற்கு பிரபலமான நிக்கான் நிறுவனம், நிக்கான் Zf என்ற புதிய மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்ய உள்ளது. அக்டோபர் மாத இரண்டாம் வாரத்திற்கு பிறகு வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இந்த நிக்கான் Zf கேமராவை கொண்டு புகைப்படம் மட்டுமின்றி காட்சிகளையும் வீடியோ பதிவு செய்ய முடியும்.
நிக்கான் Zf கேமராவில் எக்ஸ்பீட் 7 இமேஜ் பிராசஸிங் வசதி இடம் பெற்றுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட அதிர்வுகளை குறைக்கும் நுட்பம் பயன்படத்தப்பட்டுள்ளதால், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் போது அசைவுகள் இருந்தாலும் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்ய முடியும்.
வை-பை வசதி கொடுக்கப்பட்டுள்ளதால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை உடனடியாக பறிமாறிக் கொள்ளவும் முடியும்.
Zf மாடலானது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிக்கான் FM2 கேமரா போன்ற உடல் அமைப்பையும், சில சிறப்பான அம்சங்களையும் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
நிக்கான் Z9 மாடலுக்கு இணையான வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டது மற்றும் புதிய மோனோக்ரோம் செலக்டர் வசதியால் கருப்பு வெள்ளை புகைப்படங்களை இன்னும் துல்லியமாக பதிவு செய்ய முடியும்.
ஆட்டோ போக்கஸ் வசதியுடன், 24.5 மெகா பிக்செல் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிக்கான் Z f கேமராவில் இடம் பெற்றுள்ள சில அம்சங்களை பார்க்கலாம்
லென்ஸ் மவுண்ட்: நிக்கான் Z மவுண்ட்
சென்சார் அளவு: 35.9mm × 23.99mm
புகைப்பட சென்சார் வகை: CMOS
குறைந்த பட்ச ஐஎஸ்ஓ சென்சிடிவிட்டி 100 முதல் அதிகபட்சமாக 51,200 கொண்டுள்ளது.
வீடியோ வகை: MOV மற்றும் MP4
மானிட்டர் அளவு: 8-cm டையக்னல்
மானிட்டர் ரெசல்யூசன்: தோராயமாக 2100 k-dot
எடை: தோராயமாக 650 கிராம்
ரூ.1,76,995 என்ற விலையில் விற்பனைக்கு வர உள்ளது. தேவையான லென்ஸ்களை மாற்றி பொருத்திக் கொள்ளும் வகையிலான டிஜிட்டல் கேமரா இது.
இதற்கு முன்னதாக வெளியான மிரர்லெஸ் கேமராக்களில் நிக்கான் Z f தான் விலை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவித்ரா பலராமன்
அழகிரியை அகற்ற காங்கிரஸுக்குள் கடைசி முயற்சி!- ரகசியக் கூட்டம்!
எம்.எஸ்.சுவாமிநாதன்: பசுமைப் புரட்சியும் ஆன்மீக வேளாண்மையும்!