இரவில் செய்யும் சில தவறுகளால் உடல் எடை கூடும் என்றும், அதனால் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கூறும் மருத்துவர்கள்…
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட இரவு நேர உணவு முறையைப் பின்பற்றுங்கள் என்கிறார்கள்.
“இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் சரியாக சாப்பிடாமல் இருப்பது பலருக்கு சகஜமாகி விட்டது.
இந்த வரிசையில் பலர் பகலில் கடினமாக உழைத்து. இரவில் அதிகமாகச் சாப்பிட்டு ஓய்வெடுக்கிறார்கள். இப்படி, அதிக அளவு இரவில் சாப்பிடுவது உடல் எடையைப் பாதிக்கும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
சிலருக்கு இரவு உணவு முடிந்த உடனேயே காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், அது எடையை அதிகரிக்கச் செய்யும். காபியில் உள்ள காஃபின் தூக்கத்தைக் கெடுக்கும். அத்துடன் படிப்படியாக உடல் பருமனுக்கும் இது வழிவகுக்கும்.
அதே போல க்ரீன் டீ குடிப்பது உடல் நலத்துக்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இரவு உணவுக்குப் பிறகு அதை எடுத்துக் கொண்டால் தீங்கு விளைவிக்கும். இரவில் க்ரீன் டீ குடித்தால் தூக்கக் கலக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படும்.
தண்ணீர் குடிப்பது ஒரு கெட்ட பழக்கம் அல்ல. ஆனால், இரவு உணவுக்குப் பிறகு அதை அதிக அளவு உட்கொள்வது நல்லதல்ல.
ஆயுர்வேதத்தின்படி, உணவுக்கு இடையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமான செயல்பாட்டில் தலையிடுகிறது.
எனவே, சாப்பிட்ட பிறகு, தண்ணீர் குடிப்பதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
இரவு சாப்பிட்ட உடனே தூங்குவது நல்லதல்ல. இந்த தவற்றை பலர் செய்கிறார்கள். சாப்பிட்ட உணவு ஜீரணிக்க 10-15 நிமிட நடைப்பயிற்சி அவசியம்.
இல்லையெனில், செரிமானமின்மை காரணமாக, வாய்வு, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிடும் வழக்கம் இந்திய வீடுகளில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது திருப்தி உணர்வைத் தருவதாக நம்பப்படுகிறது.
ஆனால், உண்மையில் இரவு உணவுக்குப் பிறகு இனிப்புகளைச் சாப்பிடும்போது, அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இரவில் குறைவான உடல் உழைப்பு காரணமாக அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்” என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷாக் அடிக்குது மக்களே : அப்டேட் குமாரு
அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு : யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?
9 நாட்களுக்கு அந்யோதயா விரைவு ரயில் ரத்து : பயணிகள் அதிருப்தி!
‘சண்டாளர்’ சாதி பெயரை பயன்படுத்த கூடாது : பழங்குடியின ஆணையம்!