டிஜிட்டல் உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் முக்கிய பங்கு வகிப்பது இன்ஸ்டாகிராம்.
இதில் பயனர்களின் வயதுக்கு ஏற்ப பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. அதோடு அடிக்கடி புதிய அப்டேட்களும் வருகிறது.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் மற்றும் பார்க்கப்படும் வகையிலான வரையறுக்கப்பட்ட பதிவுகளை (வன்முறை, ஆபாசம், முகச்சுழிப்பை ஏற்படுத்துபவை) கட்டுப்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் 16 வயதிற்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கினை தொடங்கும்போது தானாகவே ‘லெஸ்’ (less) என்ற முறையில்தான் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியும்.
அதேநேரம் ஏற்கனவே 16 வயதிற்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வந்தால், அவர்களுக்கு ‘Standard’ என்ற பிரிவின்படி வரையறுக்கப்பட்ட பகுதிகள் செயல்பட்டு கொண்டிருக்கும். இருப்பினும் அவர்கள் சுயமாக ‘less’ செய்து கொள்ளலாம். இதன் மூலம் வரையறுக்கப்பட்ட பதிவுகளை தவிர்க்க முடியும்.
எப்படி LESS செய்வது என்பதை பார்க்கலாம்;
- உங்களுடைய இன்ஸ்டாகிராம் புரொபைல் பக்கத்திற்கு செல்லவும்.
- அதில் ‘Settings’ ஐ தேர்வு செய்யவும்.
- அதனுள் இருக்கும் ‘Account’ ஐ தேர்வு செய்யவும்.
- தொடர்ந்து ‘Sensitive content control’ ஐ தேர்வு செய்யவும்.
- அதில் உங்களுக்கு ‘Standard’ என்ற பிரிவு தேர்வு செய்யப்பட்டிருக்கும்.
- அதற்கு பதிலாக அதன் கீழுள்ள ‘less’ பிரிவை கிளிக் செய்யவும்.
இனி உங்களுக்கு வன்முறை, ஆபாசம், முகச்சுழிப்பை ஏற்படுத்தும் எந்த பதிவுகளும் வராது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜாலியோ ஜிம்கானா: இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம்!