ஓலா நிறுவனம் புதிதாக Ola S1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் முழு விபரம் இதோ..
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதனை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கடந்தாண்டு ஓலா நிறுவனம் எஸ்ஒன் ப்ரோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது Ola S1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை ரூ.99,999 ஆக நிர்ணயித்துள்ளது அந்த நிறுவனம்..
புதிய Ola S1 ஐ வாங்க விரும்பினால் ரூ. 499 செலுத்தி ஆகஸ்ட் 31 வரை புக்கிங் செய்யலாம் எனவும் அவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி இதற்கான தளம் திறக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றவர்கள் 2ம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம் எனவும் வாகனத்தின் டெலிவரி செப் 7ஆம் தேதி முதல் துவங்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
3kwh பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த Ola S1 ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 கி.மீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது.
இந்த வாகனமானது எக்கோ மோடில் 128 கி.மீ, நார்மல் மோடில் 101 கி.மீ ஸ்போர்ட்ஸ் மோடில் 90 கி.மீ தூரம் செல்லும் எனவும் இந்த பைக் அதிகபட்சமாக 95 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஓலா s1 ஸ்கூட்டர் Jet Black, Coral Glam, Liquid Silver, Porcelain White, and Neo Mint ஆகிய ஐந்து நிறங்களில் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- க.சீனிவாசன்