வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு அனுப்பிய செய்தியையோ, புகைப்படத்தையோ இரண்டு நாட்களுக்கு பிறகும் டெலிட் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இன்று உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இதனை உலகில் 150 கோடிக்கும் மேலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மெட்டாவுக்கு சொந்தமான இந்த வாட்ஸ் அப் செயலி பயனர்களின் எளிமையான பயன்பாட்டிற்காக அடிக்கடி புதிய புதிய அப்டேட்களை அளித்து வருகிறது.
அந்தவகையில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கியமான அப்டேட் வாட்ஸ் அப்பில் இடம் பெற்றுள்ளதை பயனர்கள் வரவேற்றுள்ளனர்.
பொதுவாக வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு அனுப்பிய ஒரு புகைப்படைத்தையோ, டைப் செய்யப்பட்ட செய்தியையோ டெலிட் செய்வதற்கு பயனருக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நேரத்தை கடந்து, தான் அனுப்பிய செய்தியை பயனர் ஒருவர் டெலிட் செய்ய நினைத்தால் அவரது தரப்பில் மட்டுமே அது நீக்கப்படும். மாறாக யாருக்கு அனுப்பப்பட்டதோ அவருக்கு டெலிட் ஆகாது. வாட்ஸ் அப்பில் இருக்கும் இந்த டெலிட் செய்யும் காலத்தினை நீட்டிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

டெலிட் செய்ய காலநேரம் நீட்டிப்பு!
இதனைக் கருத்தில் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அதிரடியான அப்டேட்டை வெளியிட்டு தனது பயனாளர்களை ஆச்சரியத்தில் அசரடித்துள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் பயனர்கள், தாங்கள் அனுப்பிய செய்திகளை ஒரு மணி நேரத்திற்குப் பதிலாக இரண்டு நாட்களுக்கு பின்பும் டெலிட் செய்யும் வசதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அனுப்பிய செய்தியை டெலிட் செய்ய பயனர்களுக்கு இப்போது இரண்டு நாட்கள் மற்றும் 12 மணிநேரம் என மொத்தம் 60 மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு டெலிட் செய்யப்படும் செய்தியோ, புகைப்படமோ தங்களுக்கு மட்டுமின்றி யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டதோ அவர்களது பக்கத்தில் இருந்தும் நீக்க முடியும்.
ஆனால் இந்த புதிய வசதியை பெற இதற்கு ஒரு நிபந்தனையையும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது வாட்ஸ் அப் செயலியின் புதிய வெர்சனை அப்டேட் செய்திருந்தால் மட்டுமே 2 நாட்களுக்கும் பிறகும் டெலிட் செய்யும் வசதியை பெற முடியும். செயலியினை அப்டேட் செய்யாத பயனர்களுக்கு இந்த புதிய அம்சம் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பை எப்படி அப்டேட் செய்வது?
*புதிய அம்சங்களை பெற, கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று தேடுதல் பட்டியலில் வாட்ஸ்அப்பை தேட வேண்டும்.
*வாட்ஸ்அப் பக்கத்தில் சமீபத்திய அப்டேட்டிற்காக, ‘அப்டேட்’ பட்டனைக் கிளிக் செய்யவும்.
*ஒருவேளை உங்களுக்கு ’அப்டேட்’ பட்டன் காணப்படவில்லையென்றால், நீங்கள் ஏற்கனவே சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட்டினை பெற்றுள்ளீர்கள் என்பதாகும்.
கிறிஸ்டோபர் ஜெமா
25ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு: பொன்முடி