தோள்பட்டை வலி… பெற்றோரிடம் கூட சொல்லாத சுமை தூக்கும் சிறுவன்! கலங்கடித்த நீயா நானா?

டிரெண்டிங்

வாழை படத்தில் மாணவர்கள் வேலைக்கு சென்று கொண்டே , பள்ளிக்கு செல்லும் சூழலில்  சந்திக்கும் கஷ்டங்களை விவரித்திருந்தனர். இதையொட்டி, இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் படித்துக் கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள் பங்கேற்று தங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

கோவில்பட்டியை சேர்ந்த சிறுவன் ரமேஷ். இவர் தனது தாயுடன் விஜய் டி.வி. நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றார். ரமேஷின் தந்தை லாரி டிரைவர். ரமேசுக்கு இரு தம்பிகள் உள்ளனர். வீட்டில் கஷ்ட ஜீவனம் என்பதால் பள்ளி நேரம் தவிர ரமேஷ் வேலைக்கு சென்று பெற்றோருக்கு உதவியாக இருக்கிறான். சுமை தூக்கும் வேலைக்கு சென்ற ரமேசுக்கு  தோள்பட்டையில் தொடர்ந்து வலி இருந்துள்ளது.

இந்த நிலையில், நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, தனக்குள்ள தோள் பட்டை வலி குறித்து ரமேஷ் பகிர்ந்திருந்தான். மேலும், அந்த வலியை தாங்கிக் கொண்டே தொடர்ந்து சுமை தூக்கி வந்ததாகவும் அந்த மாணவன் உருக்கமாக கூறியிருந்தான்.  ஆனால், தனது தோள்பட்டை வலி குறித்து ஒரு முறை கூட பெற்றோரிடத்தில் கூறியதில்லை. வலியை மறைத்துக் கொண்டேதான் வேலைக்கும் சென்று வந்துள்ளான். ரமேஷின் வார்த்தைகள் பலரையும் கண்ணீர் விட வைத்து விட்டது.

நிகழ்ச்சியில்  படித்துக் கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள் பகிர்ந்த வலிமிகுந்த வார்த்தைகளை இப்போது பலரும் உருக்கமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மற்றும் த.வெ.க கட்சியின் தலைவரான விஜய்யும் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு உடனடியாக உதவி செய்துள்ளார்.

நீயா நானா நிகழ்ச்சி வெளியானவுடனே சில மணி நேரத்தில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ரமேஷின் வீட்டுக்கு போய், என்ன என்ன தேவையோ அத்தனையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

ரமேஷ் இது பற்றி கூறுகையில், “நீயா நானாவில் நான் பேசியது லைரலானது என்று சொல்கிறார்கள். என்கிட்ட பட்டன் போன்தான் உள்ளது. ஸமார்ட் போன் இல்லை. அதனால், நான் பார்க்கவில்லை.  இப்போது நிறைய பேர் உதவி செய்யுறேனு சொல்றாங்க. வேலைக்கு போய்ட்டு வர வண்டி வாங்கி தாரேனு சொல்லிருக்காங்க . அம்மாவுக்கு கடை வைக்க  25 ஆயிரம் உதவிருக்காங்க” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கட்டதுரை கெட்ட துரையா? – மலையாள நடிகை வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!

அம்மா இப்படி செய்யாதீர்கள்… இன்போஸிஸ் சுதா மூர்த்திக்கு புத்திமதி சொன்ன கண் தெரியாத பூசாரி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *