நயன், விக்னேஷ் சிவன் திருமணம்: நெட்பிளிக்ஸ் அப்டேட்!

டிரெண்டிங்

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் “Nayanthara: Beyond the Fairytale” என்ற பெயரில் ஆவணப்படமாக விரைவில் வெளியாக இருப்பதாக, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

alt="nayanthara wedding netflix release date"

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகி நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இவர்களது காதல் மற்றும் திருமணம் நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து வரும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் “Nayanthara: Beyond the Fairytale” என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறியுள்ளது.

மேலும் நெட்பிளிக்ஸ் வெளியிட்ட வீடியோவில், நயன்தாரா, “நான் என்னுடைய வேலையை மட்டுமே முழுமையாக நம்புகிறேன். அதனால் என்னைச் சுற்றி அன்பு நிறைந்த மனிதர்கள் இருக்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன்,  “நயன்தாராவின் இயற்கையான குணாதிசயத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் எனக்கு ஊக்கமளிப்பவராக உள்ளார். மிகவும் அழகான மனம் படைத்தவர் நயன்தாரா” என்று பேசியுள்ளார். தற்போது ட்விட்டரில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

செல்வம்

‘மாமனிதனுக்கு’ டோக்கியோ திரைப்பட விருது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *